இளையராஜாவுடன் உடனே நடந்தது… அந்த பிரபலத்துக்காக மூன்று மாதம் காத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான்!...
Ilayaraja: தமிழ்சினிமாவில் இசைக்கென்று தனி அடையாளத்தினை படைத்து இருப்பது இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் தான். அவர்கள் இசையில் ஒரு பாடலாவது பாடி விட மாட்டோமா என பலரும் யோசித்து இருந்த நிலையில், ஒரு பாடகிக்கு நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்.
ஆறு தேசிய விருதுகள் வென்று தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் 25000 பாடலுக்கு அதிகமாக பாடியவர் சித்ரா. ரசிகர்களிடம் பிரசித்தி பெறாத அயல்நாட்டு மொழிகளிலும் கூட இவர் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாடகியாக வலம் வருகிறார்.
இதையும் படிங்க: அட்ஜெட்ஸ் பண்றதுல என்ன தப்பு?.. பேட்டி கொடுத்து வாய்ப்புகளை அள்ளிய பூனைக்கண் புவனேஸ்வரி!..
தமிழில் சித்ராவின் முதல் பாடலை இளையராஜா இசையில்தான் பாடினாராம். பாசில் இயக்கத்தில் ஒரு மலையாள படத்தில் பாடியிருந்த சித்ராவின் குரல் அந்த நாயகிக்கு அப்பட்டமாக பொருந்தியதாம். அந்த குரலையே தமிழிலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்பதற்கே அந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார் இளையராஜா.
அந்த படம் பூவே பூச்சுடவா. வாய்ஸ் டெஸ்ட்டில் இளையராஜாவே பிரமித்துவிட்டாராம். ஆனால், தமிழில் முதல் பாடலாக வெளி வந்தது நீதானா அந்த குயில் படத்தின் பாடல் தானாம். அதன்பின்னரே, பூவே பூச்சூடவா படத்தின் பாடல் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியது வேறு மாதிரி இருந்ததாம்.
இதையும் படிங்க: திட்டி பேசிய ரஜினி!.. அமைதியாக இருந்த தயாரிப்பாளர்!.. ஜெயலலிதாவுக்கு வந்த கோபம்!..
பாட்டு பாடிய பிறகுதான் அவர் பின்னணி இசையே கம்போஸ் செய்வாராம். முதன்முதலில் அவர் இசையில் மலர்களே மலர்களே பாடல் பாடி இருந்தார். அதன்பின்னர், 'ஓகே கண்மணி' படத்தில் பாட வாய்ப்பு வந்து இருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் சித்ரா ஊரில் இல்லாமல் இருந்தாராம்.
அதனால் அவருக்கு பதில் வேறு யாரும் அந்த பாடலை பாடி இருப்பார்கள் என நினைத்து இருக்கிறார். ஆனால் ஒரு டிவி நிகழ்ச்சியில் சித்ராவை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பாடலை சித்ரா பாட வேண்டும் என்பதற்காக மூன்று மாதமாக காத்திருப்பதாக கூறி ஆச்சரியப்பட வைத்தாராம். அதன் பிறகு பாடிய பாடல்தான் 'மலர்கள் கேட்டேன்' எனக் கூறப்படுகிறது.