ஆசையா கேட்ட இளையராஜா!. அழகா டியூன் போட்ட எம்.எஸ்.வி!. அட அந்த பட்டா!...

இளையராஜா வருவதற்கு முன் தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பல மெல்லிசை பாடல்களை கொடுத்தவர். 1950 முதல் 70 வரை பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் பல படங்களுக்கு இசையமைத்தவர். எம்.எஸ்.வி இசை, கண்ணதாசன் பாடல் வரிகள், டி.எம்.எஸ் குரல் என அப்போது தமிழ் சினிமா களை கட்டியது. எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் என அவர்களுக்கு பொருந்துவது போல இசையமைத்தார் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆர், […]

Update: 2024-06-02 07:00 GMT

இளையராஜா வருவதற்கு முன் தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பல மெல்லிசை பாடல்களை கொடுத்தவர். 1950 முதல் 70 வரை பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் பல படங்களுக்கு இசையமைத்தவர்.

எம்.எஸ்.வி இசை, கண்ணதாசன் பாடல் வரிகள், டி.எம்.எஸ் குரல் என அப்போது தமிழ் சினிமா களை கட்டியது. எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் என அவர்களுக்கு பொருந்துவது போல இசையமைத்தார் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திற்கு பின் பல ரஜினி, கமல் படங்களுக்கும் எம்.எஸ்.வி இசையமைத்தார்.

இதையும் படிங்க: அடுத்த எம்.ஜி.ஆர் இவர்தான்!.. ஜெயலலிதா சொன்ன அந்த நடிகர்!.. நடந்தது இதுதான்!…

அன்னக்கிளி படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் பார்வை இளையராஜா பக்கம் திரும்பியது. இளையராஜாவின் நாட்டுப்புற மற்றும் மண் வாசனை மிக்க பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. எம்.ஜி.ஆரே ஒரு கட்டத்தில் இளையராஜாவை தனது படத்தில் இசையமைக்க வைத்தார். ஒரு பாடல் உருவாகி இளையராஜாவே பாடினார். ஆனால், அந்த படம் உருவாகவில்லை.

80களில் இளையராஜாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து சில படங்களில் இசையமைத்தனர். அது எப்படி எனில் பாடலுக்கான மெட்டை எம்.எஸ்.வி போடுவார். மற்ற இசை சேர்ப்பு பணிகளை இளையராஜா செய்வார். இப்படி மெல்ல திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, விஸ்வ துளசி மற்றும் செந்தமிழ் செல்வன் ஆகிய 4 படங்களில் இருவரும் இணைந்து வேலை செய்தனர்.

இந்த அனைத்து படங்களிலுமே பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கும். குறிப்பாக மோகன் நடிப்பில் வெளிவந்த மெல்லத் திறந்தது கதவு படத்தின் பாடல்கள் இப்போதும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கான கம்போசிங் நடந்த போது ‘1953ம் வருடம் வெளிவந்த ‘சண்டி ராணி’ என்கிற படத்தில் நீங்கள் இசையமைத்த ’வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே’ என்கிற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதுபோல, ஒரு பாடல் போட்டு கொடுங்கள்’ என எம்.எஸ்.வியிடம் இளையராஜா ஆசையாக கேட்க எம்.எஸ்.வி போட்ட பாடல்தான் ‘வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே’ . மோகன் - அமலாவுக்கு அமைந்த இந்த பாட்டை எஸ்.பி.பி மிகவும் இனிமையாக பாடியிருப்பார். இந்த படத்தின் வெற்றிக்கு பாடல்கள் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News