கல்யாணமாகி இந்திரஜா தனியா ஹனிமூன் போவாங்கன்னு பார்த்தா!.. அங்கேயும் ரோபோ சங்கர் ஃபேமிலியே போகுதே!..
ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் திருமணம் கடந்த மார்ச் 24ம் தேதி மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. பல பிரபலங்களுக்கு திருமணத்துக்கு அழைப்பு விடுத்தாலும் சில பிரபலங்கள் மட்டுமே மதுரையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் திருமணத்துக்கும் சென்றனர்.
சூரி, விமல், அறந்தாங்கி நிஷா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் திருமணத்தில் கலந்து கொண்டு இந்திரஜாவை வாழ்த்தினார்.
இதையும் படிங்க: ஆடுஜீவிதம் முதல் விமர்சனம்!.. மணிரத்னமுடன் படம் பார்த்த கமல்ஹாசன்!.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
திருமணம் வரை ரோபோ சங்கர், பிரியங்கா உள்ளிட்டோர் செம லூட்டி அடித்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தினர். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு இந்திரஜா சங்கரும் கார்த்திக்கும் எங்கே போகப் போகின்றனர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது குடும்பத்துடன் ஒன்றாக கிளம்பி ஏதோ ஒரு ஊருக்கு காரில் செல்லும் வீடியோவை போட்டுள்ளனர்.
ஹனிமூன் போறீங்களா? அல்லது ஏதாவது குடும்ப டூர் போறீங்களா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். குடும்பத்துடன் கிளம்பி குலதெய்வ கோயிலுக்கு செல்வது போலத்தான் தெரிகிறது. பாட்டி முதல் குழந்தை வரை மொத்தமாக திருமணம் முடிந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஆக்சன் ரூட்டுக்கு மாறி மொக்கையான பரத்!.. வாய்ப்புக்காக வில்லனாக மாறிய சோகம்….
அடுத்த வீடியோவில் இந்திரஜா சங்கர் அப்பா ரோபோ சங்கர் மற்றும் கணவர் கார்த்திக்குடன் இணைந்து எங்கே போனார் என்பதை அவரே வீடியோவாக வெளியிட்டு விடுவார். இப்படி அனைத்தையும் சோஷியல் மீடியாவில் போட்டு விட்டு ட்ரோல் செய்கின்றனர் என்றும் தப்புத் தப்பா கமெண்ட் போடாதீங்க என்றும் புலம்புவது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த வீடியோ காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..