பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் நடிக்கும் கமல்!. அட நம்பவே முடியலையே!.

by sankaran v |
பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் நடிக்கும் கமல்!. அட நம்பவே முடியலையே!.
X

Kamal Rajni

கமல், ரஜினி இருவரும் இணைந்து எப்போது படம் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலாய் காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலையில் அதற்கான காலம் கனிந்து வருகிறது போலும். இது நடந்தால் ரசிகர்கள் வாண வேடிக்கை காட்டிவிடுவர்.

கைதி படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விட்டார். அவரது படங்கள் என்றாலே குறிப்பாக இளம் ரசிகர்களுக்குப் பிடித்து விட்டது. அடிதடி, காமெடி, காதல்னு படம் பட்டையைக் கிளப்புகிறது. இவரது படங்களில் கதை ஒன்லைனாக இருந்தாலும் எடுத்திருக்கும் விதம் வியக்க வைக்கிறது. ஒன்மேன் ஆர்மியாக வந்து படத்தைத் தூக்கி நிறுத்திவிடுகிறார்.

யூகிக்க முடியாத திருப்பங்களுடன் திரைக்கதையைக் கொண்டு செல்லும் லாவகத்தில் லோகேஷ் தனித்து நிற்கிறார். பழைய கதையாக இருந்தாலும் ஸ்க்ரீன் பிரசன்ட்ஸ்சில் ஜொலிக்கிறார்.

விஜய் நடித்த மாஸ்டர், கமலின் விக்ரம் என இரு பிளாக் பஸ்டர் ஹிட்டுகளைத் தந்ததும் உலகளவில் பிரபலமானார். இந்தப்படம் 500 கோடி வசூலை வாரிக்குவித்தது.

Thalaivar 171

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான பல மெகா ஹிட் படங்களின் மூலம் தமிழ்த்திரை உலகம் எல்சியு என்ற வார்த்தையைக் கண்டுகொண்டது. சமீபத்தில் வெளியான லியோ படம் அதை உறுதி செய்தது. கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் வசூலில் சாதனை படைத்தது.

கைதி, விக்ரம், லியோவுடன் எல்சியுவில் இணைந்தது. லியோ படத்தில் கடைசி கட்டத்தில் கமல் தன் கம்பீரக்குரலில் கர்ஜிக்கிறார். அதனால் எல்சியு உறுதியானது.

இப்போது தலைவர் 171ஐ விக்ரமுடன் எல்சியுவுக்குக் கொண்டு வர விரும்புகிறார். இந்தப்படத்துக்கு கமல் ஏற்கனவே அனுமதி கொடுத்துவிட்டார். தலைவர் 171ல் கமல் 7 நிமிடங்கள் நடிக்கிறாராம். படம் 2024 மார்ச்சில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் இந்த ஆண்டுக்குள் உறுதியாகிவிடுமாம். அனிருத் இசை அமைக்கிறார்.

Next Story