அர்த்தமாயிந்தா ராஜா!.. விஜய் ஃபேன் தியேட்டர்லையே இப்படி கீழ இறக்கி உட்கார வச்சிட்டாரே சூப்பர்ஸ்டார்!

by Saranya M |   ( Updated:2023-12-24 14:18:33  )
அர்த்தமாயிந்தா ராஜா!.. விஜய் ஃபேன் தியேட்டர்லையே இப்படி கீழ இறக்கி உட்கார வச்சிட்டாரே சூப்பர்ஸ்டார்!
X

ரசிகர்களின் கோட்டை என சொல்லி வந்த கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய டாப் 10 படங்களின் லிஸ்ட்டை தற்போது ரோகிணி தியேட்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் விஜய்யின் லியோ தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் என எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.

தளபதி விஜய்யின் தீவிர ரசிகராக அந்த படத்தின் ஓனர் ரேவந்த் சரண் இருந்து வரும் நிலையில், லியோ படம் அதிக வசூலை ஈட்டவில்லையா? என்றும் ரோகிணி தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டதற்கே அந்த படத்தின் வசூல் காசு எல்லாம் சரி செய்ய செலவாகி விட்டதா என விஜய் ரசிகர்களை ரஜினிகாந்த் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கையில் காசில்லாத போதும் நண்பரை சாப்பிட அழைத்துச் சென்ற ரஜினி.. ஹோட்டலில் நடந்தது இதுதான்!..

நமக்கு கிடைத்த பலி ஆடு அஜித் தான் என லியோ 2வது இடத்திலும், வாரிசு 3வது இடத்தையும் பிடித்த நிலையில், 4வது இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு படத்தை வைத்து அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் இன்னொரு பக்கம் வச்சு செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு டாப் 10 இடங்களை ரோகிணி தியேட்டரில் பிடித்துள்ள படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம் வாங்க..

இதையும் படிங்க: அறிமுக இயக்குனர்கள் அசத்தல் ஹிட் கொடுத்த 2023!.. அன்பால் அரவணைத்த அயோத்தி…

1. ஜெயிலர்

2. லியோ

3. வாரிசு

4. துணிவு

5. பொன்னியின் செல்வன்

6. மார்க் ஆண்டனி

7. மாவீரன்

8. ஜவான்

9. டிடி ரிட்டர்ன்ஸ்

10. விடுதலை

இதே போல ஒவ்வொரு பெரிய தியேட்டர்களும் தங்கள் தியேட்டரில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட உள்ளன.

Next Story