கடைசி நிமிஷத்தில் கைவிட்ட தயாரிப்பாளர்… ஓடி வந்து கைக்கொடுத்த ஜெய்சங்கர்… என்ன மனிஷன்யா!
என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் ஆகியோர் மிகப் பெரிய கொடை வள்ளலாக திகழ்ந்தவர்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ஆனால் இந்த வரிசையில் ஜெய்சங்கரும் ஒரு கொடை வள்ளலாக இருந்தார் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
கொடை வள்ளல் ஜெய்சங்கர்
தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு மட்டுமல்லாது, யாராவது கஷ்டத்தில் இருப்பது தெரிந்தால் கூட ஓடிச்சென்று உதவம் நற்குணத்தை கொண்டிருந்தவர் ஜெய்சங்கர். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் ஆகியோர் கொடை வள்ளலாக அறியப்பட்ட அளவுக்கு ஜெய்சங்கர் அறியப்படவில்லை என்பதுதான்.
இந்த நிலையில் தான் நடிக்கும் திரைப்படம் மிகப்பெரிய பொருளாதார சிக்கலை சந்தித்தபோது வழியச்சென்று அந்த சுமையை தனது தோளில் தாங்கியிருக்கிறார் ஜெய்சங்கர். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்…
1976 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் “வாயில்லா பூச்சு”. இத்திரைப்படத்தை இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே இத்திரைப்படத்திற்கு பொருள் உதவி செய்வதாக இருந்த நபர் கைவிட்டுவிட்டார். மிகவும் சோகத்தில் ஆழ்ந்துப்போனார் கோபாலகிருஷ்ணன். அந்த சமயத்தில் அத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆன ஜெய்சங்கர், “எதுக்கு இப்போ கலங்குறீங்க. எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்ளுகிறேன்” என ஆறுதல் கூறிவிட்டு அந்த படத்தில் பணியாற்ற இருந்த அனைத்து கலைஞர்களிடமும் “உங்களுடைய சம்பளத்திற்கு நான் பொறுப்பு. அனைவரும் வந்து பணியாற்றுங்கள்” என கூறினாராம்.
இதனை தொடர்ந்து ஜெய்சங்கரின் பொருளுதவியோடு இத்திரைப்படம் முழுவதும் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் படமாக்கப்பட்டதாம். இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறது. இது ஜெய்சங்கரின் கொடை வள்ளல் தன்மைக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயமே.
இதையும் படிங்க: உன் அக்கிரமம் தாங்கமுடியலய்யா- வாலியை லெஃப்ட் ரைட் வாங்கிய எம்.ஜி.ஆர்…