கமல் படத்துல நடிச்சதுக்கு இதுதான் காரணம்... ஆனா பெரிய இழப்பு ஆகிடுச்சு... கபிலன் ஃபீலிங்
தசாவதாரம் படத்தில் கமலுக்கு உதவியாளர் கேரக்டரில் பாடலாசிரியர் கபிலன் நடித்து இருந்தார். இதுகுறித்து அவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் அந்த அனுபங்களைப் பகிர்ந்து கொண்டார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
தசாவதாரம் படத்துல கருப்பு கமல் வர்றாரு. அதுக்கு உதவியா இருக்கும். அது அந்த மக்களின் முகமா இருக்கும். நிறமா இருக்கும். அதுக்கு கபிலன் கரெக்டா இருப்பாரு. படத்துல அவரு கபிலனாவே வர்றாரு. அவரோட டயலாக்கை அவரே எழுதிப் படிக்கிறாரு.
'மணல் கூழாங்கற்களின் குழந்தை. நீங்கள் மண்ணை வெட்டுவது எங்கள் மழலையை வெட்டுவதற்குச் சமம்' அப்படின்னு சொல்வேன். கபிலன் சினிமாவுல பாடல் எல்லாம் எழுதுறாரு. என்ன படிக்கிறன்னு கேட்கும்போது எம்.ஏ.எம்.பில்னு சொல்வேன்.
நம்ம நடிக்கிறோம்னு நடிச்சேன். அதுக்கு அப்புறம் நிறைய பேரு கேட்டாங்க. இல்லன்னு சொல்லிட்டேன். மிஷ்கினே கேட்டாரு. 'நடிக்கிறீயா கபிலன்'னு. வேணாம்னுட்டேன். நான் கமலிடமும் அதுதான் சொன்னேன்.
அவர் என்னை கன்வின்ஸ் பண்ணினாரு. 'நீங்க நீங்களா தான் நடிக்கிறீங்க. உங்களை மாதிரி நான் நடிக்கிறது தான் சிரமம். அதைப் புரிஞ்சிக்கிட்டு நடிக்கணும். நீங்க வர்றீங்க. உங்களோட ஸ்கிரிப்ட்ட நீங்களே எழுதுறீங்க. பாடலாசிரியரா வர்றீங்க. போறீங்க'ன்னு சொன்னார். கண்ணதாசன் நாகேஷ் கூட நடிச்சிருக்காரு. வாலி கூட நடிச்சிருக்காரு. கவிஞரா நடிக்கல.
இதையும் படிங்க... ரஜினி படத்துக்கு மியூசிக் போட வந்த வாய்ப்பு!.. எல்லாமே போச்சி!..
கேரக்டரா நடிச்சிருக்காரு. கண்ணதாசனாவும் எம்ஆர்.ராதா கூட நடிச்சிருக்காரு. ஆனா அந்த ஆண்டு பெரிய இழப்பு தான். நிறைய படங்கள் வரல. நடிக்கப் போயிட்டாருன்னு. சிவாஜி, அழகிய தமிழ்மகன், பீமா படங்கள் வந்தது. சார் நடிச்சிட்டு வந்துடறன்னு சொன்னேன்.
'ஓ நடிக்கப் போயிட்டீங்களா... கூப்பிடுறேன்'னு சொல்லிடுவாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் காலண்டர் சாங்கை எழுதியவர் கபிலன் என்பது குறிப்பிடத்தக்கது.