21 வருஷம் கழிச்சி ஒரே ஸ்டுடியோவில் சந்தித்து கொண்ட ரஜினி - கமல்... வைரல் கிளிக்ஸ்..
kamal and rajini: நடிகர் ரஜினிக்கும் கமலுக்கும் நீண்டகால நட்பு உண்டு. ஏனெனில், ரஜினி அறிமுகமான முதல் படத்திலேயே கமலுடன் இணைந்துதான் நடித்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி ரஜினிகாந்த் அறிமுக நடிகர் எனில், கமல் அப்போது ஸ்டாராக இருந்தார். எனவே, அப்போது கமலை பிரமிப்போடு பார்த்தவ ரஜினி. இப்போதுவரை அது தொடர்கிறது.
அதன்பின் கமலுடன் இணைந்து பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், மூன்று முடிச்சி, ஆடு புலி ஆட்டம், அவள் அப்படித்தான் என பல திரைப்படங்களில் கமலுடன் இணைந்தே ரஜினி நடித்து வந்தார். ஆனால், இனிமேல் தனியாக நடிப்போம் என கமல் சொன்ன அறிவுரையை கேட்டு ரஜினி ஒரு ரூட்டில் போனார்.
ஆக்ஷன் படங்களில் நடித்து சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். கமலின் படங்களை விட ரஜினி படங்கள் அதிக வசூலையும் பெற்றது. அதேநேரம், கமல் - ரஜினி இடையே தொழிற்போட்டி இருந்ததே தவிர அவர்களுக்குள் பொறாமை என்பது எப்போதும் இருந்தது இல்லை. இப்போதும் தான் நடிக்கும் படங்கள் தொடர்பாக ரஜினிக்கு ஒரு குழப்பம் வந்தால் அவர் கேட்பது கமலிடம்தான்.
அதேபோல், கமல் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் பார்த்துவிட்டு முதல் ஆளாக பாராட்டுவதும் ரஜினிதான். சில வருடங்களுக்கு முன் கமலுக்கு திரையுலகம் விழா எடுத்தபோது அதில் கலந்துகொண்டு தன்னை தாழ்த்திக்கொண்டு கமலை உயர்த்தி பேசியவர் ரஜினி. அதன்பின் பேசிய கமல் ‘ரஜினி இப்படி பேசியிருக்க தேவையில்லை. ஆனால், அதுதான் ரஜினி. திரையுலகில் ரஜினிக்கும், எனக்கும் இடையே இருக்கும் நட்பு எவனுக்கும் இல்லை’ என ஒப்பனாக பேசியிருந்தார்.
இப்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதேபோல், கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் அங்கு துவங்கியுள்ளது. அதாவது 21 வருடங்கள் கழித்து ரஜினி, கமல் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு ஒரே ஸ்டுடியோவில் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து, கமலும், ரஜினியும் சந்தித்துக்கொண்டு பரஸ்பரம் விசாரித்துக்கொண்டு அன்பை பகிர்ந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை இந்த இரு படங்களையும் தயாரிக்கும் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.