சிவாஜியை தேசிய விருது வாங்க விடாமல் தடுத்த கமல்ஹாசன்.! பின்னணியில் இருந்த தரமான சம்பவம்.!
சினிமாவில் நடிப்புக்கு உதாரணமாக விளங்குபவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை அருமையாக நடித்து கொடுத்துவிடுவார்கள். சிவாஜி மண்ணை விட்டு மறந்தாலு கூட அவருடைய படங்கள் இன்றய காலகட்டத்தில் கூட பலர் பார்ப்பது உண்டு.
சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தேவர்மகன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கமல்ஹாசன் சிவாஜியிடம் தேசிய விருதை நீங்கள் நேரில் சென்று வாங்காதீர்கள் என்று கூறிவிட்டாராம்.
துணை நடிகருக்கான தேசிய விருதை நேரில் சென்று வாங்காதீர்கள் என்று கூறிவிட்டு, கொஞ்சம் பொறுங்கள் வாழ்நாள் சாதனையாளருக்கான தேசிய விருது உங்களுக்கு வரும் அதனை நீங்கள் வாங்கிகொள்ளுங்கள் என்று சிவாஜியிடம் கமல்ஹாசன் தெரிவித்தாராம்.
இதையும் படியுங்களேன்- தலைவர் 170.! தனது நண்பருக்காக சம்பளத்தை பாதியாக குறைத்த ரஜினிகாந்த்.! அந்த நல்ல மனசு தான் சூப்பர் ஸ்டார்.!
அவர் கூறியது போலவே, அடுத்த நான்கு வருடங்களில் 1996ஆம் ஆண்டு சிவாஜிக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. நடிப்புக்கென பல்வேறு நாடுகளில் பல்வேறு விருதுகளை வாங்கிய நடிகர் திலகம், சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருது கூட வாங்க வில்லை என்பது ஆச்சர்யமான தகவல்.