இந்திரஜா சங்கர் திருமண ரிசப்ஷன்!.. கமல்ஹாசன், ராமராஜன், சிவகார்த்திகேயன் என திரண்ட திரையுலகம்!..

by Saranya M |   ( Updated:2024-03-31 16:28:52  )
இந்திரஜா சங்கர் திருமண ரிசப்ஷன்!.. கமல்ஹாசன், ராமராஜன், சிவகார்த்திகேயன் என திரண்ட திரையுலகம்!..
X

இந்திரஜா சங்கரின் திருமணம் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்துக்கு முந்தைய திருமண வரவேற்பு விழாவில் நடிகர் சூரி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமண விழாவில் விமல், வெங்கட் போஸ் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் என பலர் பங்கேற்றனர்.

சினிமா பிரபலங்கள் பங்கேற்பதற்காக சென்னையில் தனியாக மார்ச் 31 ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் நாயகன் ராமராஜன் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்யை வச்சு செய்யும் முடிவில் லோகேஷ் கனகராஜ்!.. தலைவர் 171 படத்தோட டைட்டில் இதுதானா?..

ரோபோ சங்கரின் மகன் இந்திரஜா கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பு தற்போது நடைபெற்று வரும் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்டவை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பிரபல யூடியூப் சேனலில் அனைத்தும் வீடியோக்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. பிரத்தியேகமாக ரோபோ சங்கரின் திருமணத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து அந்த சேனல் வெளியிட்டு வருகிறது.

இதையும் படிங்க: யம்மாடி!.. காமப் பார்வையால இருக்கு!.. கோட்டை கழட்டி காட்டும் சமந்தா!.. இதுக்கு மேல தாங்காதும்மா!..

கமல்ஹாசன் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஞாயிறு இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

நடிகர் ரோபோ சங்கர் மாப்பிள்ளை போல சூப்பரான லுக்கில் இருந்துக் கொண்டு வரும் பிரபலங்களை வரவேற்று வருகிறார். லைட் பிங்க் நிற டிசைனர் சேலையை அணிந்துக் கொண்டு ஏகப்பட்ட நகைகளை அணிந்துக் கொண்டு இந்திரஜா சங்கர் ஜொலிக்கிறார்.

Next Story