நான் நடிச்சிருந்தா கூட இப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்க மாட்டேன்! நெப்போலியனை பார்த்து கமல் சொன்ன படம்
Nepolean about Kamal: இன்று நடிகர் கமல் தனது பிறந்த நாளை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறார். இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் காற்றினால் உருவாகும் தண்ணீர் என்ற இயந்திரத்தை நன்கொடையாக மருத்துவமனைக்கு வழங்கியிருக்கிறார். மேலும் ஆங்காங்கே இரத்ததான முகாமும் நடத்துகிறார்கள்.
ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் அரசியல் என தன்னால் முடிந்த செயல்களை செய்து கொண்டு வருகிறார். நேற்று அவர் மணிரத்தினத்துடன் கூட்டணி அமைத்த ஒரு படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இதையும் படிங்க: தலீவரே இப்படியா வகையா சிக்குவீங்க… தக் லைஃப் படத்தின் போஸ்டரே காப்பி தான்..! கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஏற்கனவே அவர் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் நெப்போலியன் கமலை பற்றி கூறிய ஒரு தகவல் இன்று வைரலாகி வருகின்றது.ஆரம்பத்தில் நெப்போலியனை கண்டுக்காமல் தான் இருப்பாராம் கமல்.
எந்த ஒரு பொது மேடையானாலும் கமல் நம்மிடம் வந்து பேசுவார் என எதிர்பார்ப்பாராம் நெப்போலியன். ஆனால் அவரை கண்டுக்கவே மாட்டாராம். அப்படி ஒரு விழாவில் ரஜினியும் கமலும் மேடையில் உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்சம் தாமதமாக வந்த நெப்போலியன் மேடையில் ஏறினாராம்.
இதையும் படிங்க: மொத்த அழகையும் காட்டி ஃபிளாட் ஆக்கிட்டியே!.. சைனிங் அழகில் ஸ்கோர் பண்ணும் கீர்த்தி ஷெட்டி..
இவரை பார்த்ததும் ரஜினியும் கமலும் எழுந்து நின்று கை குலுக்கினார்களாம். அந்த நேரம் கமல் நெப்போலியனிடம் ‘உங்க சீவலப்பேரி படம் பார்த்தேன். அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அந்தப் படத்தில் முதலில் நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால் இப்போது பார்க்கும் போது அந்தப் படத்தில் நான் நடித்திருந்தால் கூட இந்த மாதிரி ஒரு நடிப்பை நான் வெளிப்படுத்தியிருப்பேனா என தெரியவில்லை’ என்று கூறி வியப்படைய வைத்தாராம் கமல்.