லைட்டா பட்டி டிங்கரிங்!.. அந்த படத்தின் தழுவல்தான் தேவர் மகன்!.. அட ஆமால்ல!..
கமல்ஹாசன் கதை, திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் கமலின் தந்தையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். மேலும் ரேவதி, கவுதமி, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மாமன்னன் பட விழாவில் இப்படம் பற்றி மாரி செல்வராஜ் பேசிய பின் கடந்த சில நாட்களாகவே தேவர் மகன் திரைப்படம் பற்றி பலரும் விவாதிக்க துவங்கிவிட்டனர். தேவர் மகன் ஒரு சாதி பெருமை பேசும் படம் என […]
கமல்ஹாசன் கதை, திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் கமலின் தந்தையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். மேலும் ரேவதி, கவுதமி, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மாமன்னன் பட விழாவில் இப்படம் பற்றி மாரி செல்வராஜ் பேசிய பின் கடந்த சில நாட்களாகவே தேவர் மகன் திரைப்படம் பற்றி பலரும் விவாதிக்க துவங்கிவிட்டனர்.
தேவர் மகன் ஒரு சாதி பெருமை பேசும் படம் என பல வருடங்களாகவே பேசி வருகின்றனர். ஆனால், சாதிக்குள் இருக்கும் வன்முறையை பற்றித்தான் கமல் பேசியிருக்கிறார். வன்முறை கூடாது என சொல்லும் ஒருவன் ஒரு கட்டத்தில் கோபமடைந்து வன்முறையை கையில் எடுக்கிறான் என்பதுதான் கதை என கமல் ரசிகர்கள் ஒருபக்கம் விளக்கமளித்து வருகின்றனர்.
அதிலும், தேவர் மகன் படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரத்தின் நீட்சிதான் மாமன்னன் என மாரி செல்வராஜ் பேச, தேவர் மகன் படத்தில் கதைப்படி இசக்கியே தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்தான் என கமல் ரசிகர்கள் பொங்க கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளம் பற்றி எறிந்தது. மாரி செல்வராஜை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காட் பாதர் படத்தை சுட்டுத்தான் கமல் தேவர் மகன் படத்தை எடுத்திருப்பார் என்பது பலருக்கும் தெரியவில்லை. காட் பாதர் கதை என்ன?.. ஓரு ஊரில் ஒரு டான் இருப்பார். அரசியல், சமூகம் என அதிகாரத்தில் இருப்பார். அவரின் இளைய வாரிசு வெளியூரில் படித்து கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் காதலியுடன் அவர் அப்பாவை பார்க்க சொந்த ஊருக்கு வருவார். வந்த இடத்தில் அப்பாவுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பார்த்தும், அவரின் இறப்புக்கு பின்னும் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அப்பா செய்த அதே வேலையை, அதாவது டானாக மாறுகிறான். இதுதான் தேவர் மகன் கதையும் கூட.
காட் பாதரின் தழுவல் என சொல்லப்பட்ட நாயகன் படத்தில் கூட மார்ல்ன் பிராண்டோவின் மேனசரித்தை மட்டுமே கமல் காப்பியடித்திருப்பார். ஆனால், முழுக்க முழுக்க அது வேறு கதை. ஆனால், காட் பாதர் படத்தின் அப்படமான நகல் தேவர் மகன் படம்தான்.
அதேநேரம் தமிழுக்கு ஏற்றது போல பட்டி டிங்கரிங் பார்த்து சாதி வன்முறை கூடாது என்கிற நல்ல கருத்தை அதில் வைத்து சுவராஸ்யமாக திரைக்கதை எழுதியிருப்பார் கமல்ஹாசன்.
அதனால்தான் தேவர் மகன் படம் பற்றி இப்போதும் பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.