Kanguva Review: சூர்யா ஓபனிங் சீன் தெறி... கங்குவாவின் வெறியாட்டம்... டிவிட்டர் விமர்சனம் இதோ...
சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இன்று உலகெங்கும் வெளியாகி உள்ள படம் கங்குவா. சூர்யா, திஷாபதானி, பாபிதியோல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிறப்புக்காட்சியாகப் பார்த்த ரசிகர் ஒருவர் சொல்லும் விமர்சனம் இதுதான். தனது எக்ஸ் தளத்தில் பரம்பொருள் என்ற பெயரில் பகிர்ந்துள்ளார்.
Also read: கங்குவா படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட்!… ஆனா ஒரு கண்டிஷன்?!…
படத்தைப் பார்த்த கேரள ரசிகரின் விமர்சனம் இதுதான். கங்குவா படத்தில் சூர்யாவின் வெறியாட்டம் தான். தியேட்டருல பார்த்தால் தான் அந்த எக்ஸ்பிரீயன்ஸை அனுபவிக்க முடியும். பிரம்மாண்டமான காட்சிப்படுத்துதலும், கிராபிக்ஸ்சும் மட்டும் கிடையாது.
சூர்யாவின் என்ட்ரி
அதை இப்படி எல்லாம் எடுக்க முடியுமான்னு கூட நினைச்சிப் பார்த்திருக்கவே முடியாது. அப்படி எடுத்திருக்காங்களாம். எல்லாத்துக்கும் மேலா கங்குவா படத்துல சூர்யாவின் என்ட்ரி வெறியாட்டம் தான். அப்படி ஆடியிருக்காராம். நடிப்புல அவ்வளவு உழைப்பு அவரு போட்டுருக்காரு.
கங்குவா போர்சன்ஸ்
பேன்டஸி வகை ஹீரோ எப்படி எல்லாம் சாதிக்கணுமோ அதை சரியா செஞ்சிருக்காரு சூர்யா. ஆரம்பத்துல கொஞ்சம் வேதாளம், விவேகம் மாதிரி காட்சிகள் வந்தது. கொஞ்சம் டல் அடிச்சது. உண்மை தான். ஆனா கங்குவா போர்சன்ஸ் படத்துல ஆரம்பிச்சதும் சிறுத்தை சிவா மறைஞ்சிட்டாரு.
நிறைய நடிகர், நடிகைகள் இருக்காங்க. ஆனா அந்தக் கெட்டப்ல பார்க்கும் போது யார் யாருன்னு கண்டுபிடிக்க முடியலை. கருணாஸ் போகும் இடம் வெகுதூரமில்லை படத்துக்கு அப்புறமா அருமையா நடிச்சிருக்காரு. போஸ் வெங்கட் பிரமாதமா நடிச்சிருக்கார். பாபி தியோல் மிரட்டுகிறார்.
கூஸ்பம்ப்ஸ்
காடு, மலை, கடல், போர்க்காட்சிகள்னு எல்லா இடங்களிலும் பிரம்மாண்டம், அழகான ஒளிப்பதிவு. இவை தான் படத்திற்குப் பலம். அதிலும் முதலையைக் குத்திக் கொல்ற சீன் கிராபிக்ஸ் எக்ஸ்பிரீயன்ஸ் தமிழ்சினிமாவுக்குப் புதுசு, வேற லெவல்.
படத்தில் நிறைய இடங்கள் கூஸ்பம்ப்ஸ்சாத் தான் இருக்கு. 3டில படம் வந்துருக்கிறதால குழந்தைகளுக்கு ரொம்பவே படிக்கும். சிவா சாருக்கே உரிய பில்டப் டயாலாக் எல்லாம் இருந்தாலும் கதைக்கு சரியா மேட்ச் ஆகியிருக்கு.
இரண்டாம் பாகம்
கடைசில வச்சிருக்கிற ட்விஸ்ட் அடுத்த பாகத்துக்கான லீடாகவே சூப்பரா இருக்குது. தமிழ்சினிமாவின் அருமையான பேன்டஸி படைப்பு. தமிழ் சினிமா உலகமே பெருமை கொள்கிற படமாகத் தான் இது வந்துருக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
இவர் கேரளாவில் நேற்று இரவு 11.45 மணிக்கு சிறப்புக்காட்சியில் படத்தைப் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.