பிரபலம் காட்டிய அந்த சைகை....! படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தால் கொந்தளித்த தேசிய விருது நடிகை....!

by Rohini |
keerthy_main_cine
X

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவான படம் சாணிக்காயிதம். இந்த படம் ஓடிடியில் வெளியானது. வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கான்ஸ்டபிள் பெண் போலீஸ் தனக்கு நேர்ந்த அநீதியை எதிர்த்து அதற்கு காரணமானவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் சுற்றிக் கொண்டிருக்கும் கதை தான் சாணிக் காயிதம்.

keerthy1_cine

அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் எதிர்பார்த்ததையும் விட நன்றாக நடித்தார் என இயக்குனர் பாராட்டினார். இந்த கதையை கீர்த்தியிடம் கூறும் போது என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கீர்த்தி கேட்டாராம். ஏன் நீங்க இந்த படத்தில நடிக்கக் கூடாது இந்த மாதிரி கதை இதுவரைக்கும் நீங்கள் பண்ணுனது இல்லை ஆகையால் எடுத்து நடியுங்கள் என்று அருண் கூற அதன்பிறகு தான் நடித்தாராம் கீர்த்தி.

keerthy2_cine

மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் முகம் தெரியாத நபர்கள் நடித்திருப்பார்கள் எனினும் கச்சிதமாக அவரவர் கதாபாத்திரங்களை நடித்துக் கொடுத்திருப்பர். இந்த நிலையில் வில்லன்களில் ஒருவரான விஜய் முருகன் கோர்ட்டுக்கு போகும் போது ஹார்ட்டின் சைகையை காட்டி காட்டி கீர்த்தியை கடுப்பேத்துவார். அதை பார்த்து கீர்த்தி கோபத்தின் எல்லைக்கே போய்விடுவார். இது தான் ஸ்கிரிப்ட். அப்போது விஜய் முருகனின் சூட் முடிந்து அவரை இயக்குனர் 2 மணி நேரம் ஓய்வு எடுங்கள் அதன் பிறகு தான் உங்கள் ஷாட் என்று சொல்லிவிட்டாராம்.

keerthy3_cine

மறுபடியும் ஒருவர் வந்து விஜய் முருகனிடம் உங்களை சூட்டிற்கு இயக்குனர் கூப்பிடுகிறார் என்று சொல்ல இவரும் போனாராம். 2 மணி நேரம் கழித்து என்று சொன்னீர்கள் என்று கேட்க இல்லை கீர்த்திக்கு கோபம் வரவில்லையாம் சைகையை பார்க்க பார்க்கத்தான் கோபம் வருகிறதாம் அதனால் கேமராவிற்கு பின்னாடி நின்று அந்த சைகையை காட்டிக் கொண்டிருங்கள் என்று கூற அவரும் நடித்தாராம். நடித்து முடித்து கீர்த்தி விஜய் முருகனிடம் உங்கள கொன்றாதால் நான் ஃபிரீ ஆவேன் என்று சொன்னாராம். அதற்கு விஜய் முருகன் படம் தானே எத்தனை தடவை வேணும்னாலும் வந்து கொல்லுங்கள் என்று பதில் கூறினாராம். ஏனெனில் படம் முழுக்க இவர் ஒருவர் மேல் தான் கீர்த்தியின் கதாபாத்திரம் கோபத்துடனயே இருக்கும் அதனால் கிண்டலுக்கு அப்படி சொன்னாராம் கீர்த்தி.

Next Story