அவருதானே ஹீரோ'... ஆத்தீ! வன்ம குடோனா இருப்பாரு போல!
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படம் அது. சென்னையின் இன்னொரு பகுதியை எடுத்துக்காட்டிய படத்தில் முன்னணி ஹீரோ தன்னுடைய ஆஸ்தான இயக்குனருடன் மீண்டும் ஒருமுறை இணைந்து இருந்தார். ரவுடியிசம் எப்படி உருவாகி வளர்கிறது என்பதை தனக்கே உரிய பாணியில் இயக்குனர் சொல்லி இருந்தார்.
நடிகை ஒருவரின் டாப்லஸ் சீன் பயங்கரமாக பேசப்பட்டது. அந்த ஆண்டில் கோலிவுட்டிற்கு வாழ்வு கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அடுத்தடுத்த பார்ட்டுகள் இன்னும் வரவில்லை. ஷூட்டிங்கே போகாமல் எப்படி படம் வரும் என சினிமா ஆர்வலர்கள் முணு முணுக்கின்றனர். ஷூட்டிங் செல்வதற்கு முன் இன்று டாப் ஹீரோவாக இருக்கும் ஒருவரும் படத்தில் இருந்தாராம்.
இதையும் படிங்க: நான் சினிமாவில் இருந்து எப்பயோ விலகி இருப்பேன்!.. என்ன எஸ்கே இப்படி சொல்லிட்டாரு!..
ஆனால் அவரு நடிச்சா எனக்கு ஸ்பேஸ் இருக்காது தூக்கிடுங்க என ஹீரோ அழுத்தம் கொடுக்க வேறு வழியின்றி காட்டன் இயக்குனர் உள்ளே வந்தார். கடைசியில் ஹீரோ பயந்தது தான் நடந்தது. ஹீரோவின் நடிப்பை விட இயக்குனரின் நடிப்பை அனைவரும் ஏகத்திற்கு புகழ, இன்னொரு பார்ட் எடுத்தாதானே என ஹீரோ கால்ஷீட் கொடுக்காமல் வெவ்வேறு படங்களுக்குத் தாவி விட்டார்.
இதில் இன்னொரு விஷயம் லேட்டஸ்ட் ஆக வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் படம் ரிலீஸ்க்கு முன்னால் சரக்கை போட்டு ஹீரோ, இயக்குனருக்கு போன் செய்துள்ளார். 'என்ன இருந்தாலும் படத்தோட ஹீரோ நீங்கதான' என்று அவரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த, 'இனிமே உன் படத்துல நடிக்க மாட்டேன் சாமி' என்று இயக்குனர் போனை வைத்து விட்டாராம்.
நல்ல வேளை படத்துல அந்த ஹீரோ நடிக்கல இல்லேன்னா பொறாமையில பொசுங்கி போயிருப்பாரு என்று, விஷயம் தெரிந்தவர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.