அப்போ விஷால் மட்டும் என்ன தக்காளி தொக்கா!.. தனுஷுக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயமா?..
நடிகர் தனுஷ் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடிக்க மறுத்து வருவதாக அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தயாரிப்பாளர்கள் திடீரென நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு விதிப்பது போன்ற முடிவு எடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உடனடியாக நடிகர் சங்கர் நிர்வாகிகளான கார்த்தி மற்றும் கருணாஸ் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து தனுஷுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தயாரிப்பாளர் சங்கம் இது குறித்து முன்கூட்டியே தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் ஒரு நடிகரை இப்படி நடிக்க விடமாட்டேன் என சொல்வதெல்லாம் அராஜகம் என்பது போல பேசினார்.
ஆனால் இதே நடிகர் சங்கத்தை சார்ந்தவர்கள் விஷால் குறித்து தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போன்ற நோட்டீஸை வெளியிட்டு, தயாரிப்பாளர் சங்க காசை நடிகர் விஷால் மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு வந்தபோது ஏன் விஷாலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என பத்திரிக்கையாளர் பிஸ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சிம்பு, வடிவேலு உள்ளிட்டவர்களுக்கும் ரெட் கார்டு விதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் இருந்த போதும், அவர்களுக்கு சங்கம் ஆதரவாக இருந்ததா என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
நடிகர் சங்கம் எப்போதும் போல இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும் பிஸ்மி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் அணி திரண்டு இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.