திங்கட்கிழமை தலைவலி!.. தனுஷையும் பிடித்து ஆட்டுதே!.. ராயன் பாக்ஸ் ஆபிஸ் அலப்பறை அவ்ளோதானா?..

by Saranya M |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, சந்திப் விஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், சரவணன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

தனுஷ் பிறந்தநாள் ஜூலை 28-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ராயன் திரைப்படம் ஜூலை 26-ஆம் தேதி வெளியானது. ராயல் திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 50 கோடிக்குள் தான் இருக்கும் என்கின்றனர்.

நடிகர்களின் சம்பளத்தை கழித்துவிட்டு பார்த்தால் தனுஷ் குறைவான பட்ஜெட்டில் தரமான மேக்கிங் கொண்ட படத்தை இயக்கி உள்ளார் என்கின்றனர். ராயன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் உலக அளவில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாகவும் இந்தியாவில் 42 கோடி வசூலை கடந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், திங்கட்கிழமை்யான நேற்று படத்தின் வசூல் சரிவை சந்தித்துள்ளது. வெறும் ஐந்து கோடி ரூபாய் மட்டுமே இந்தியளவில் இந்த படம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்தியளவில் ராயன் திரைப்படம் இதுவரை 47.90 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். 2வது வாரம் இறுதியில் மீண்டும் பிக்கானால் தான் 100 கோடியை தொடும் என்றும் இல்லையென்றால் 70 முதல் 80 கோடி வரும் என்றும் கூறுகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு போட்ட காசை ராயன் திரைப்படம் எடுத்து தந்து லாபகரமாக படமாகவே மாறிவிட்டது என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா 100 கோடியை கடந்த நிலையில், தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படமும் அந்த சாதனையை எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story