இந்தியன் 2 படம் உருவாக யார் காரணம்னு தெரியுமா? ஷங்கர் இல்லையாம்...!
இந்தியன் 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்டத்துக்கு சற்றும் குறையாமல் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையொட்டி படத்தின் இயக்குனர் ஷங்கர் படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இந்தக் காலகட்டத்தின் தேவை 'ஜீரோ டாலரன்ஸ்' னு கமல் சொல்வார். சேனாபதியைப் பொருத்தவரை பார்ட் 1லயே தெரியும். சொந்த மகனாக இருந்தாலும் தப்பு செஞ்சா பார்த்துக்க மாட்டாரு. அதோட நீட்டிப்பு தான் இந்தப் படம். முதல்ல இந்தப் படத்தைத் தொடர்ச்சியா எடுக்கற ஐடியா இல்ல. […]
இந்தியன் 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்டத்துக்கு சற்றும் குறையாமல் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையொட்டி படத்தின் இயக்குனர் ஷங்கர் படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தக் காலகட்டத்தின் தேவை 'ஜீரோ டாலரன்ஸ்' னு கமல் சொல்வார். சேனாபதியைப் பொருத்தவரை பார்ட் 1லயே தெரியும். சொந்த மகனாக இருந்தாலும் தப்பு செஞ்சா பார்த்துக்க மாட்டாரு. அதோட நீட்டிப்பு தான் இந்தப் படம்.
முதல்ல இந்தப் படத்தைத் தொடர்ச்சியா எடுக்கற ஐடியா இல்ல. ஆனா கமல் சார் வந்து சொன்னாரு. இந்தப் படத்தைத் தொடர்ச்சியா எடுக்கலாமான்னு கேட்டார். ஆனா அதுக்குக் கதை இல்லை. வந்தா சொல்றேன். எடுக்கலாம்னு சொன்னாரு. ஆனா நியூஸ் பேப்பரைப் படிக்கும்போது லஞ்சம். தாத்தா ஞாபகத்துக்கு வர்றாரு. ஆனா கதை இல்லை.
தொடர்ச்சி பண்ணனும். ஆனா எதையெல்லாம் பண்ணக்கூடாதுன்னு யோசிச்சேன். வேற என்ன பண்ணலாம்னு நினைக்கும்போது ஒரு களம் வந்தது. 2.ழு பண்ணும்போது அந்த ஐடியா கிடைச்சு எழுதுனேன். கமல் சாருக்கும் அது பிடிச்சிருந்தது. பார்ட் 1 தமிழகத்தைச் சுற்றியே நடக்குது. ஆனா இது இந்தியா முழுவதும் பரவுது.
அதனால சில காட்சிகள் அதிகமாகத் தேவைப்பட்டுது. இதை எடிட் பண்ணும்போது எதையும் குறைக்க முடியல. அதனால தான் பார்ட் 3 உருவானது. இந்தியன் 2 முடியும்போது இந்தியன் 3 டிரெய்லர் இரண்டரை நிமிஷம் ஓடும்.
அடுத்த பாகம் விஎப்எக்ஸ், எல்லா டிப்பார்ட்மெண்டும் ஒத்துழைச்சி பண்ணினான 6 மாசத்துல வர சாத்தியம் இருக்கு. அது எப்படி 6 மாசத்துல வருதுன்னு கேட்டாலும் அதுக்காகவும் 6 வருஷமா உழைச்சிருக்கோம். அதுல கொரானோ வந்த காலத்தை எல்லாம் கழிச்சிட்டீங்கன்னா என்னோட எல்லா படத்துக்கும் எவ்வளவு காலம் ஆகுமோ அதுதான் இந்தப் படமும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.