ஜெயிலர் 2 படத்தோட கதைகளம் இதுதானாம்... சூப்பர் அப்டேட்டைக் கொடுத்தது யாருன்னு தெரியுமா?
ஜெயிலர் 2 ரஜினி ரசிகர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த படம். இப்போது அதற்கு விடிவுகாலம் வந்துவிட்டது.
2023ல் ஜெயிலர் முதல் பாகம் ரிலீஸ் ஆனது. அந்த வருஷமே ஜெயிலர் வருஷம்னு தான் சொல்லணும். தமிழ் சினிமாவைத் தாண்டி இந்திய சினிமாவே ஜெயிலர் வசூலை ஆச்சரியமாகப் பார்த்தது. இந்திய சினிமாவின் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களோட ஓனர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தாங்க.
நாங்க வந்து இந்த 100 வருஷத்துல பார்க்காத எழுச்சியை ஜெயிலர் படத்துல பார்த்துருக்கோம். அப்படி ஒரு வசூல் இந்தப் படத்துல வந்துருக்குன்னு சொன்னாங்க. இதை வட இந்திய பத்திரிகை முழு பக்கத்துக்கு இந்த செய்தியைப் போட்டது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் சாதனை படைத்தது. டப்பிங் படங்களிலேயே இவ்வளவு வசூலை நாங்கள் பார்த்ததில்லை என்றும் சொன்னார்கள். இந்தப் படம் தெலுங்கானாவில் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இந்தப் படத்தோட 2ம் பாகம் இருக்கான்னு பலரும் கேட்கிறார்கள். அதற்கு இயக்குனர் நெல்சன் ஏங்க இந்தப் படத்துக்கு மட்டும் கேட்குறீங்க. என்னோட எல்லா படத்துக்கும் எனக்கு 2ம் பாகத்துக்கான கதை இருக்கு. கோல மாவு கோகிலா, பீஸ்ட் ஆகிய படங்களுக்கும் 2ம் பாக கதை இருக்குன்னாரு.
அதன்பிறகு கொஞ்ச நாள் நெல்சன் அமைதியாகவே இருந்தது. இதற்குக் காரணம் ஜெயிலர் 2ம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிருக்காரு. அங்கேயே 2ம் பாகம் உறுதியாகி விட்டது. முதல் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் முக்கியமான சில காட்சிகள் வருவதாக சொன்னார்கள். முதல் பாகத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகையும், யோகிபாபுவும் ஜெயிலர் 2ம் பாகத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நெல்சனைப் பொருத்த வரை இந்தப் படத்தின் வெற்றி என்பது அவரது கேரியரிலேயே தெரியும். அடுத்ததாக கேஜிஎப், பாகுபலி1, பாகுபலி 2 படங்களைப் போல வசூலில் சாதனைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஜெயிலர் 2க்கு வந்துள்ளது. கல்கி ஓடுமா ஓடாதான்னு சந்தேகம் வந்தது.
ஆனால் அது வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூலித்து விட்டது. அதன் 2ம் பாகம் இன்னும் நல்லா இருப்பதாக சொல்கிறார்கள். ஜெயிலர் 2ல் ஜெயிலர் 1க்கு முந்தைய காலத்தில் நடக்கும் காட்சிகள் வரும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியன் 2 மற்றும் 3 பாகங்களில் முந்தைய வரலாறு தொடர்வதைப் போல தொடருமாம்.
ரஜினிக்கு வரும் கூலி, ஜெயிலர் என 2 படங்களும் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல். ரஜினியின் பிறந்தநாளையும் கொண்டாடும் விதமாக இந்தப் படங்கள் வெளிவர உள்ளன. ரஜினியின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டங்களையும் கணக்கில் வைத்து இந்தப் படங்களை சன் பிக்சர்ஸ் எடுத்து வருகிறதாம். மேற்கண்ட தகவல்களை பிரபல பத்திரிகையாளர் கே.சங்கர் தெரிவித்துள்ளார்.