பெரியார், மணியம்மை  பற்றி சர்ச்சை டிவிட் – உடனே நீக்கிய தமிழக பாஜக !

தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரையும் மணிமேகலையும் இழிவு செய்யும் விதமாக டிவிட் போட்டுவிட்டு கண்டனங்கள் பெருகியதும் அதை உடனே நீக்கியுள்ளது தமிழக பாஜக.

By :  adminram
Update: 2019-12-24 07:59 GMT

தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரையும் மணிமேகலையும் இழிவு செய்யும் விதமாக டிவிட் போட்டுவிட்டு கண்டனங்கள் பெருகியதும் அதை உடனே நீக்கியுள்ளது தமிழக பாஜக.

திராவிட இயக்கத்தின் பிதாமகர் தந்தை பெரியாரின் 46-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்களால் அனுசரிக்கப்படுகிறது. தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் இன்றைய அவரது தேவைக் குறித்தும் அவர் நினைவைப் போற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரையும் அவரது மனைவி மணிமேகலையும் இழிவு செய்யும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளது.

அதில் ‘மணியம்மையின் தந்தை ஈ.வே..ராமசாமியின் நினைவு தினமான இன்று!! குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்’ என அறுவறுக்கத் தக்க வகையில் ஒரு பதிவைப் போட்டது. இந்த பதிவுக்கு கண்டனங்கள் எழவே உடனடியாக அதை நீக்கியுள்ளனர்.

அதாவது பெரியார் மணிமேகலையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதை குழந்தை திருமணம் போலவும் குழந்தையின் மீதான வன்முறை போலவும் காட்ட முற்படுகிறது பாஜக. ஆனால் பெரியாரை திருமணம் செய்து கொள்ளும் போது மணிமேகலைக்கு 27 வயது என்பதும் அவராகதான் விருப்பப்பட்டு பெரியாரை திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.