ஏ.ஆர். ரகுமானை இதுக்குத்தான் தேர்வு செய்யல!.. இந்தியன் 2வில் அனிருத் வந்தது ஏன்?.. ஷங்கர் பதில்!..

by Saranya M |

கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

சுமார் 6 வருடங்களாக இந்த படத்துக்காக படக்குழு கடுமையாக உழைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியானதில் இருந்தே இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமானை விட்டு விட்டு அனிருத்தை ஏன் இசையமைப்பாளராக போட்டீங்க என ஷங்கரிடம் பலரும் கேட்டு வந்த நிலையில், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்க் கேட்டு விட்டனர்.

2.0 படத்திற்கான பின்னணி இசை பண்ணும் போதே இந்தியன் 2 படத்துக்கான பணிகளை ஆரம்பித்து விட்டேன். அப்போது ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏற்கனவே அதிக சுமையை ஏற்றியிருந்தேன். அதனால், அடுத்ததாக முன்னணியில் இருந்த அனிருத்தை இந்தியன் 2 படத்துக்கு அப்போதே ஒப்பந்தம் செய்து விட்டோம்.

ஏ.ஆர். ரஹ்மானை போல பல இசையமைப்பாளர்களையும் நான் ரசிப்பேன். அனிருத், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் என பலரும் அருமையாக இசையமைத்து வருகின்றனர். அவர்களுடன் பணியாற்றவும் ஆவலாக உள்ளேன் என ஷங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியன் 2 படத்துக்கான புரமோஷனில் தொடர்ந்து கமல்ஹாசன் அந்த படத்தை விட தனக்கு இந்தியன் 3 படம் தான் பிடிக்கும் என பேசி வருவதே படத்திற்கு பெரும் நெகட்டிவிட்டியாக மாறிவிட்டது என்கிற கேள்வியை சித்தார்த்தே மேடையில் எழுப்ப, அதற்கும் கமல் விளக்கம் அளித்துள்ளார்.

தனக்கு இந்தியன் 2வை விட இந்தியன் 3 ரொம்பவே பிடிக்கும் என்றால், அதற்காக இந்தியன் 2 பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. இரண்டு படங்களும் ஒரே படம் தான். லெந்த் அதிகம் ஆனதால் 2 படங்களாக வெளியாக போகின்றன என்றார்.

Next Story