திரௌபதி படத்திற்கு ஏற்பட்ட திடீர் பிரச்சினை: படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

சமீபத்தில் வெளியான திரௌபதி படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தை ஒரு சில பிரிவினர் கொண்டாடி வருவதாகவும் பட ரிலீஸுக்கு முன்னரே படம் வெற்றி பெற வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியதும் தெரிந்ததே. அதேபோல் இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையில் இருப்பதால் ஒரு பிரிவினர் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

By :  adminram
Update: 2020-01-21 03:04 GMT

இந்த நிலையில் திரௌபதி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க கூடாது என்றும் அப்படியே கொடுத்தாலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்தையும் கட் செய்துவிட்டு தான் கொடுக்க வேண்டும் என்றும் சென்சார் அதிகாரிகளுக்கு கடிதங்கள் குவிந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

எனவே சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை தடை செய்யவோ அல்லது முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டும் என்று கூறவோ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்சாரால் இந்த படத்திற்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் திரௌபதி படத்தை நேரடியாக டிஜிட்டல் தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது ஒரு முன்னணி டிஜிட்டல் நிறுவனம் இந்த படத்தை மிகப் பெரிய தொகை கொடுத்து வாங்க தயாராக இருப்பதாகவும், சென்சார் அதிகாரிகளின் முடிவை பொறுத்தே இந்த படத்தை டிஜிட்டல் டிவிக்கு விற்பதா? வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய படக்குழுவினர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது