தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு வழிபாடு தமிழிலா ? சமஸ்கிருதத்திலா ? -சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் !

தமிழகத்தின் கலையடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விரைவில் நடக்க இருக்கிறது.

By :  adminram
Update: 2020-01-20 04:40 GMT

தமிழகத்தின் கலையடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விரைவில் நடக்க இருக்கிறது.

தமிழகத்தின் தன்னிகரில்லாத அடையாளமாக சோழப் பேரரசின் சாதனைகளுள் ஒன்றான தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இதையடுத்து கோயிலின் குடமுழுக்கின் போது தமிழ் வழியில் மட்டுமே மந்திரங்கள் சொல்லி வழிபடவேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்மந்தமாக ஜனவரி 22 ஆம் தேதி தஞ்சாவூரில் தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் சார்பாக மாநாடு நடத்த உள்ளனர். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட இரு மொழிகளிலும் வழிபாடு செய்யப்படும் என தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறையின் அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பேசலாம என தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவின் தலைவர் பெ மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார்.