கழுத்தை கிழித்து மறுபுறம் வெளியே வந்த மீன் - வாலிபருக்கு நேர்ந்த சோகம்

இந்தோனோசியாவில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

By :  adminram
Update: 2020-01-22 16:41 GMT

அந்நாட்டில் வசித்து வருபவர் முகமது இதுல்(16). இவர் சமீபத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது மூக்கு கூர்மையாக உள்ள மீன் பாய்ந்து வந்து அவரின் கழுத்தில் குத்தியது. அதன் வாய் பகுதி மிகவும் நீளமாக இருக்கும் என்பதால் அச்சிறுவனின் கழுத்தில் ஒரு புறம் குத்தி மறுபுறம் வெளியே வந்தது.

இதனால் சிறுவன் அலறித் துடித்தான். எனவே, சிறுவனை அவனின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். கழுத்தில் மிகவும் முக்கியமான இரத்தக்குழாய் செல்வதால் மிகவும் கவனமாக மீனை மருத்துவர்கள் அகற்றினர். சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து சுமார் 2 மணி போராடி சிறுவனை காப்பாற்றினர்.

அந்த மீன் தண்ணீரிலிருந்து மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பாயும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது.