செல்போனில் பேசிக்கொண்டே ஊசி போட்டு நர்ஸ்: திடுக்கிடும்

நோய் நர்ஸ் ஒருவர் நோயாளிக்கு செல்போனில் பேசிக்கொண்டே ஊசி போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

By :  adminram
Update: 2019-12-19 05:55 GMT

நோய் நர்ஸ் ஒருவர் நோயாளிக்கு செல்போனில் பேசிக்கொண்டே ஊசி போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

செல்போன் என்பது மனிதனின் அத்தியாவசிய தேவையாகிவிட்ட நிலையில் செல்போன்களால் பல நன்மைகள் உள்ளன. அதே நேரத்தில் செல்போன்களால் ஒரு சில தீமைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. செல்போனை எந்த இடத்தில் உபயோகிக்க வேண்டும், எப்போது பயன்படுத்தகூடாது என்ற இங்கிதம் தெரியாமல் பலரும் இருப்பதே இதற்கு காரணம்

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு கல்பனா என்ற நர்ஸ் செல்போனில் பேசிக்கொண்டே போட்டுள்ளார். அவர் ஊசியில் மருந்தை எடுத்தபோதும் நோயாளிக்கு ஊசி போட்ட போதும் செல்போனில் பேசியதை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கவனக்குறைவாக வேறு மருந்தையோ அல்லது வேறு நோயாளிக்கோ ஊசி போட்டால் விபரீதம் நடக்கும் என்பதை அறியாமல் அவர் செல்போனில் பேசிக்கொண்டே ஊசி போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்த வீடியோ ஒன்றை அந்த மருத்துவமனையில் இருந்த ஒருவர் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் இந்த வீடியோவை வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட நர்ஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நோயாளியின் உயிரைக் காக்க வேண்டிய நர்ஸ் ஒருவரெ செல்போனில் பேசிக்கொண்டே நோயாளிக்கு ஊசி போட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது