கங்குவாவோட மோதினா காலி!.. நாம போய் சிவகார்த்திகேயனை அடிப்போம்!.. ரஜினியின் திடீர் மாற்றம்?..

by Saranya M |

ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், மலையாளத் துறை உலகின் மாஸ் நடிகர் பகத் பாசில், பாகுபலி வில்லன் ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த வேட்டையின் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

அக்டோபர் 10-ஆம் தேதி வேட்டையன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள அந்த படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்துடன் வேட்டையன் மோதாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

தீபாவளிக்கு கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜைக்கு வேட்டையன் வெளியாகுமா அல்லது தீபாவளிக்கு வெளியாகுமா என்கிற கேள்விகள் இருந்து வந்த நிலையில், தற்போது வேட்டையன் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான மிஷன் சேப்டர் ஒன், லால் சலாம், இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், வேட்டையன் படம் வசூல் வேட்டை ஆட வேண்டும் என நினைத்து சூர்யாவின் கங்குவா படத்துடன் மோதாமல் சிவகார்த்திகேயனின் அமரன் படத்துடன் மோத முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் லைகா நிறுவனம் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என்றும் கூறுகின்றனர்.

Next Story