புதுவை மாணவியை தூக்கி சாப்பிட்ட மேற்குவங்க மாணவி! பரபரப்பு தகவல்!

புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலையில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது அந்த விழாவில் கலந்துகொள்ள புர்கா அணிந்த ஒரு மாணவியை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதால் அந்த மாணவி தனக்கு கிடைக்கவேண்டிய பட்டம் மற்றும் பதக்கத்தை பெற மறுத்து விட்டதாக கூறப்பட்டது 

By :  adminram
Update: 2019-12-24 15:33 GMT

புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலையில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது அந்த விழாவில் கலந்துகொள்ள புர்கா அணிந்த ஒரு மாணவியை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதால் அந்த மாணவி தனக்கு கிடைக்கவேண்டிய பட்டம் மற்றும் பதக்கத்தை பெற மறுத்து விட்டதாக கூறப்பட்டது

இந்த தகவல் இணையதளங்களில் பரவி அரசியல்வாதிகள் ஆதரவு கொடுக்கும் அளவுக்கு மாறியது.பிரபல அரசியல்வாதிகள் பலர் இதுகுறித்து தங்களுடைய டுவிட்டரில் ஆவேசமான கருத்தை பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் புதுவை மாணவிக்கு பாராட்டு ஒருபுறம் குவிந்து வரும் நிலையில் புதுவை மாணவியை வெளியே தூக்கி சாப்பிடும் அளவுக்கு மேற்குவங்க மாணவி ஒருவர் இதே போல் ஒரு பதக்கம் வழங்கும் விழாவில் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜாதவ்பூர் என்ற பல்கலைக்கழகத்தில் பதக்கம் வாங்க வந்த மாணவி ஸ்மிதா சவுத்ரி என்பவர் திடீரென தனது கையிலிருந்த குடியுரிமை சீர்திருத்த சட்ட நகலை மேடையிலேயே கிழித்து எறிந்து ’இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று ஆவேசமாக முழங்கி அதன் பின்னர் தனக்கு உரிமையான பதக்கத்தையும் பெற்றுவிட்டு மேடையிலிருந்து கம்பீரமாக கீழே இறங்கினார். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அந்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது