நீங்க கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.. யோகிபாபு சொன்ன 'நச்' பதில்..!

காமெடி நடிகர் சூரி தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகளை இப்படி அசை போடுகிறார்.

Update: 2024-08-07 13:00 GMT

காமெடி நடிகர் யோகி பாபு அமீர் தயாரித்து நடித்த படம் யோகி. சுப்பிரமணியம் சிவா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தான் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அந்தப் படத்தின் பெயரே அவருக்கு அடையாளமாக மாறிப்போனது. இவர் சாதாரணமாகப் பேசினாலே படத்தில் காமெடி தெறிக்கும். இவரும் இவரது சகநடிகரான சூரியும் போட்டியாளர்கள் என்று சொல்றாங்க.

ஆனா இருவரும் நல்ல நண்பர்களாம். சூரிக்காக யோகி பாபு மதுரை ராக்காயி அம்மன் கோவில்ல அர்ச்சனையே பண்ணியிருக்காராம். இருவரும் ஒருவருக்கொருவர் படங்களில் சிறப்பாக நடிக்கும்பட்சத்தில் பாராட்டுவதுண்டு. மண்டேலா பார்த்து விட்டு சூரி யோகியைப் பாராட்டினாராம்.

விடுதலை, கருடன் பார்த்து விட்டு யோகிபாபு சூரியைப் பாராட்டியுள்ளார். அந்த வகையில் யோகிபாபு சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்தது நெஞ்சைத் தொடுகிறது.

உங்க கஷ்ட காலத்தைப் பத்தி சொல்லுங்க. இப்போ பிசியா இருக்கீங்க. இதைப் பத்தியும் சொல்லுங்கன்னு யூடியூப் சேனல் ஒன்றில் நிருபர் ஒருவர் யோகிபாபுவிடம் கேள்வி கேட்கிறார்.

அதற்கு அவர் நான் சினிமாவுக்கு வாய்ப்பு தேடி அலைஞ்ச அந்த டைம்ல ரொம்ப கஷ்டப்பட்டேன். அதைப் படமா பண்ணனும்னு ரெண்டு மூணு டைரக்டர்கள் கேட்டாங்க. அன்னைக்குப் பார்த்த கஷ்டங்களை இன்னைக்கு என் வீட்டுல பார்த்தாங்கன்னா, நம்ம பையன் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுருக்கானான்னு நினைச்சிருவாங்க.

நம்ம கஷ்டத்தை யாருக்கிட்டேயாவது சொன்னா அவங்களுக்கு அது ஊக்குவிக்கிற மாதிரி இருக்கணும். பார்ரா. இவன் போனான்டா. இப்படி அடிக்கணும்டா. ஜெயிக்கணும்டான்னு இருக்கணும். சென்னையில மறக்க முடியாத விநாயகர் கோவில் இருக்கு. அங்கு போய் காலைல 8 மணிக்கு சாமி கும்பிடுவேன்.

தொன்னையில பொங்கல் பிரசாதம் கொடுப்பாங்க. அது தான் எனக்கு டிபன். எத்தனையோ இடங்கள்ல அதே மாதிரி சுத்திருக்கேன். இதை விட வலிகள்லாம் நிறைய இருக்குது. அதை சொல்லவே மாட்டேன். நீங்க கேட்டாலும். ஏன்னா அது நான் பட்ட கஷ்டம். நான் வந்து ஒரு காரோ, பஸ்ஸோ வாங்கினா நான் தான் கஷ்டப்படணும்.

என் வீட்டுக்கு டிவியோ, பிரிட்ஜோ வாங்கினா நீயா கஷ்டப்படுவ? அதனால கட்டாயமா எதை நாம சொல்லணுமோ, அதைத் தான் சொல்லணும். நீங்க கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. நமக்கு தெய்வம் துணையா இருக்கு. யாருக்கும் துரோகம் நினைக்கல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News