நரிவேட்டையைப் பார்த்து பிரபலங்கள் என்னவெல்லாம் சொல்றாங்க?... படம் அப்படியா இருக்கு?

அனுராஜ் மனோகர் இயக்கத்தில் சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், டொவினோ தாமஸ் உள்பட பலர் நடித்துள்ள படம் நரிவேட்டை. மலையாளத்தில் உருவான இந்தப் படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு இன்று வெளியாகி உள்ளது. படத்திற்கு பாசிடிவான விமர்சனங்களா என்னன்னு இனிதான் தெரியும். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா...
கே.எஸ்.ரவிகுமார்: நரிவேட்டை தமிழ் டப்பிங்கைப் பார்க்கல. மலையாளத்துல பார்த்தேன். நெஞ்செல்லாம் கனத்த மாதிரி இருந்தது. ரொம்ப வித்தியாசமான படம். பாதி மலையாளம், பாதி தமிழ் கலந்து சேரன் பேசிருக்காரு. ஆதிவாசிகளுக்கு என்னவெல்லாம் அநியாயம் நடக்குது? அது அரசு மற்றும் போலீஸ் மூலமாகவும் எப்படி நடக்குதுன்னு சொல்லிருக்காங்க.
மீனா: நடிகை மீனா பேசும்போது நரி வேட்டை படம் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. டொவினோ தாமஸ் அருமையான நடிப்பு. சேரன் நல்ல பவர் ஃபுல் கேரக்டர். எல்லாருமே ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க. டைரக்டருக்கு இது 2வது படம். கதை விறுவிறுப்பாகவும், இன்ட்ரஸ்டிங்காகவும் இருந்தது.
இயக்குனர் அமீர்: பழங்குடியின மக்களுக்கு எதிராக அரசாங்கமும், அதிகாரமும் எவ்வளவு எதிராக செயல்படுது என்பதை மீண்டும் தோலுரித்துக் காட்டிய படம் தான் நரிவேட்டை. டொவினோ தாமஸ் சிறப்பான நடிப்பு. காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருக்கு. சேரன் முதன் முறையாக மலையாளத்தில் நடித்த படம் என்கிறார் இயக்குனர் அமீர்.
சேரன்: இந்தப் படத்துல நான் வேற ஆளா நடிக்க டிரை பண்ணிருக்கேன். அது ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். எமோஷனல்ல கனெக்ட் ஆவாங்க. தினமும் நம்ம வாழ்க்கையை அதிகாரம் எவ்வளவு தூரம் சின்னாபின்னமா ஆக்குது என்பதை இந்தப் படம் சொல்லுது. தனிமனிதன் கோபப்பட முடியுமா? அதுக்கான தீர்வு கிடைக்குமா என்றால் கிடைக்கும் என்பதை இந்தப் படம் சொல்லுது என்கிறார் சேரன்.
இந்தியாவில் எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்சனைகளும், அதிகார வர்க்கத்தினரின் அட்டூழியங்களும் இருக்கிறது. அந்த மாதிரியான இந்தப் படத்தில் வர்கீஸ் மாதிரியான கேரக்டர் நியாயத்தைத் தட்டிக் கேட்கும். நல்ல படம் வேணும். வரணும்னு சொல்றவங்க இந்தப் படத்தை ஆதரிச்சா அடுத்தும் நல்ல படங்கள் வர நீங்க ஒரு கடமையைச் செய்ததாக அர்த்தம் என்றும் சேரன் தெரிவித்துள்ளார்.