அது முதுகுல குத்துற மாதிரி.. சிம்புவை பற்றி வெளிப்படையாக பேசிய ஜீவா
நடிகர் சிம்பு: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்று ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. கமல் மாதிரியே சினிமாவை பற்றிய அத்தனை நுணுக்கங்களையும் கற்றறிந்தவர் நடிகர் சிம்பு. கேமிரா கோணங்களில் இருந்து எல்லா விஷயங்களிலும் திறமையான நடிகராக இருப்பவர். சமீபகாலமாக கமெர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிம்பு தற்போது தன் பட ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
தக் லைஃப்: வருகிற ஜூன் 5 ஆம் தேதி தக் லைஃப் படம் வெளியாக இருக்கின்றது. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு,திரிஷா உட்பட அனைவரும் நடித்த படம்தான் தக் லைஃப். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது. பத்து தல படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் படம் என்பதால் தக் லைஃப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
பிறந்த நாள் டிரீட்: சில தினங்களுக்கு முன்புதான் சிம்பு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக தன்னுடைய புதுப்பட அறிவிப்பை வெளியிட்டார் சிம்பு. வரிசையாக மூன்று படங்களின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். அவருடைய 49வது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க போகிறார். 50வது படத்தை தேசிங்கு பெரியசாமி மற்றும் 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் இயக்க இருக்கிறார்.
ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் தீவிர வெறியன். அதனால் அஸ்வத் சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் இருக்கிறார்கள். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நேற்றுதான் டிராகன் படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் டிராகன் படத்தில் ஒரு பாடலை சிம்புவும் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்புவுக்கும் ஜீவாவுக்கும் பிரச்சினையா?: இந்த நிலையில் சிம்புவுக்கும் ஜீவாவுக்கும் இடையே பிரச்சினை இருப்பதாகவும் அதை ஜீவாவே ஒரு மேடையில் கூறியிருக்கிறார் என்றும் சில கிசுகிசுக்கள் வெளியானது, உண்மையில் என்னதான் நடந்தது என்பதை பற்றி ஜீவாவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒரு மேடையில் தன்னுடைய போட்டியாளர் என்று சிம்புவே சொன்னால் அது ஒரு ஆரோக்கியமான போட்டி என்றும் கூறியிருந்தேன்.
ஆனால் அருகில் இருந்து கொண்டே அதாவது நண்பன் மாதிரி பழகி அந்த நண்பனையே தன்னுடைய போட்டியாளர் என்று நினைத்து பழகினால் அது முதுகில் குத்துகிற மாதிரி என சொன்னேன். இது இரண்டையில் கன்ஃப்யூஸ் செய்து பத்திரிக்கைகளில் எழுதி விட்டார்கள். அதன் பிறகு ஒரு கச்சேரியில் அதை நானும் சிம்புவும் நல்ல முறையில் டீல் செய்து நண்பர்களாகிவிட்டோம் என ஜீவா கூறினார்.