கங்குவா 2 படம் வந்தாதான் எல்லாருக்கும் புரியும்.. இவ்ளோ விமர்சனத்த பாத்தும் இவருக்கு புரியலயே

by Murugan |
kanguva
X

kanguva

கங்குவா:

கடந்த நவம்பர் மாதம் 14 அம் தேதி ரிலீஸான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இந்த படம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் சுக்கு நூறாக்கியது கங்குவா திரைப்படம். வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் நெகட்டிவ் விமர்சனத்திற்கு கங்குவா திரைப்படம் ஆளானது.


பல வித ட்ரோலுக்கும் சூர்யா ஆளானார். இந்திய சினிமாவையே அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு நெகட்டிவ் விமர்சனத்தை எந்தப் படமும் சந்திக்கவில்லை என்பது போல ஆனது. 2000 கோடி வசூலை கண்டிப்பாக கங்குவா படம் அள்ளும் என்று சொன்ன நிலையில் போட்ட பட்ஜெட்டையே திருப்பி எடுத்ததா என்பது சந்தேகம் தான்.

கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என்று சொல்லப்பட்டது. ஆனால் முதல் நாளிலேயே படம் தோல்வியை தழுவியது. படத்தை பார்த்த பலரும் சூர்யாவின் நடிப்பை பாராடினர். அவரின் கடின உழைப்பு படத்தில் நன்றாகவே தெரிந்தது. ஆனால் அவரை நல்ல முறையில் பயன்படுத்தவில்லையே என்பதுதான் ரசிகர்களின் ஆவேசத்துக்கு காரணமாக அமைந்தது.

இன்னொரு பக்கம் தன்னுடைய பேச்சால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த ஞானவேல் ராஜா இந்தப் படத்திற்காக போட்ட பில்டப்பும் ரசிகர்களை கடுப்படைய செய்தது. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்று அறிவித்திருந்தார்கள். முதல் பாகத்திலேயே நாக்கு தள்ளிவிட்டது. இதில் இரண்டாம் பாகமா என்று ரசிகர்கள் வெறுப்பை கக்க தொடங்கிவிட்டனர்.


இந்த நிலையில் கங்குவா படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்த நட்டி கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்தால் ஒரு வேளை ரசிகர்களுக்கு புரியவரும். வெறுமனே முதல் பாகத்தை மட்டும் பார்த்துவிட்டு இப்படி சொல்லவேண்டாம். அதனால் இரண்டாம் பாகத்தை பார்த்தால் புரிய வாய்ப்பிருக்கிறது என கூறினார்.

Next Story