51வது படத்துக்கு வேறலெவல் பிளான் போட்ட சிம்பு!.. ஆனா அது நடக்காம போயிடுச்சே!...

By :  Murugan
Update: 2025-02-04 06:47 GMT

Simbu: எல்லா திறமைகளும் இருந்தும் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்காதவர்தான் சிம்பு. இவருக்கு பின்னால் வந்த தனுஷ் தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என போய்விட்டார். அதோடு, இதுவரை 3 படங்களை இயக்கி முடித்துவிட்டு இப்போது நான்காவதாக இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார்.

போட்டியாளர் தனுஷ்: இந்திய அளவில் சிறந்த நடிகராக தனுஷ் பார்க்கப்படுகிறார். ஆனால், சிம்புவோ 2 வருடத்திற்கு ஒரு படம் நடிக்கிறார். கடந்த சில வருடங்களாகவே அவர் இந்தியாவிலேயே இல்லை. தாய்லாந்து, பேங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சுற்றி வருகிறார். திடீரென வந்து உடல் எடையையும் குறைத்து மாநாடு படத்தில் நடித்தார்.

தக் லைப் கமல்: வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் வெளிவந்த வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின்னர் வெளிநாட்டுக்கு போய்விட்டார். அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக்லைப் படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.


சிம்பு 49: இந்த படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மூன்று புதிய படங்களின் அறிவிப்பு வெளியானது. இதில் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் இயக்கவுள்ளார். 50வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

சிம்பு 51: அடுத்து, சிம்புவின் 51வது படத்தை ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இவர் இப்போது லவ் டுடே பிரதீப்பை வைத்து டிராகன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிம்பு ஒரு பாடலும் பாடியிருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், மீண்டும் எப்போது இயக்குனர் அவதாரம் எடுப்பீர்கள் என சிம்பிவுடம் கேட்டபோது ‘என்னுடைய 51வது திரைப்படத்தை நானே இயக்க திட்டமிட்டிருந்தேன். அதைத்தான் இப்போது அஸ்வத் இயக்குகிறார். எனது 60வது படத்தை நானே இயக்க திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்’ என பதில் அளித்திருக்கிறார்.

Tags:    

Similar News