அஜித்கிட்ட இருந்து கத்துக்க வேண்டிய பாடம் எது தெரியுமா? இவரா இப்படி சொல்றாரு?
நம்பர் ஒன் நடிகர்: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இன்று அவர் பல பேருக்கு முன்னுதராணமாகவும் இருந்து வருகிறார். தற்போது அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். விடாமுயற்சி படத்திற்கு இப்போது சென்சார் முடிந்து யு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதை போல் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ரிலீஸ்: இரண்டு படங்களுக்கும் அஜித் முழு நேரத்தை முறையாக செலவிட்டு படத்தை முடித்துக்கொடுத்துள்ளார். இதுவரை அஜித் மீது எந்தவொரு பிளாக் மார்க்கும் வந்ததே இல்லை. அந்தளவுக்கு பொறுப்புணர்வுடனும் கவனமாகவும் செயல்பட்டு வருகிறார். நேற்று அவருடைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எதற்கும் துணிந்தவர்: கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது டிராக்கை தாண்டி அவருடைய கார் சுற்று சுற்றி தாறு மாறாக திரும்பி விபத்துக்குள்ளானது. இதுவே ஒரு சாதாரணமான காரில் இப்படி விபத்து ஏற்பட்டிருந்தால் அதில் பயணித்தவர்களின் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் அந்த விபத்துக்கு பிறகு அஜித் மிகவும் கூலாக காருக்குள் இருந்து எழுந்து வெளியே வந்தார்.
இது அதைவிட பெரும் ஆச்சரியமாக இருந்தது. எந்தவொரு அடியும் படாமல் அஜித் நன்றாக இருக்கிறார் என அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் இந்த விபத்து குறித்தும் அஜித் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது மிகவும் அடிமட்ட நிலையில் இருந்து வந்து இன்று டாப் நிலையில் இருப்பவர் அஜித்.
ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறி பணம் சம்பாதித்த பிறகு போதும்டா இந்த வாழ்க்கை. நிம்மதியா வீட்டில் உட்காருவோம் என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால் அஜித் பொருளாதார ரீதியாக ஒரு நல்ல இடத்தை அடைந்தாலும் அவருடைய லட்சியத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கிறார். இதிலிருந்து அஜித் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடம் என்றால் ஓடு ஓடிக்கிட்டே இரு என்பதுதான். பொதுவாக அஜித்தின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம்தான். அதில் ஓடிக்கிட்டே இரு என்பதற்கு உதாரணமாகவும் அஜித் இருக்கிறார் என அந்தணன் கூறினார்.