அஜித்தின் ஸ்ட்ரேட்டஜி.. வொர்க் அவுட் ஆகுமா? வேறு அணிக்காக ரேஸில் இறங்கும் தல
அஜித் தற்போது அவரது ரேஸ் அணியில் இருந்து கார் ஓட்டப் போவதில்லை என்ற ஒரு செய்தி வெளியாகி வைரலானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. துபாயில் நடக்கும் 24H கார் ரேஸில் தன்னுடைய அஜித் கார் ரேஸிங் அணி பங்கு கொண்டது. 4 டிரைவர்கள் கொண்ட அந்த அணியில் அஜித் டிரைவராகவும் அந்த அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.
24 மணி நேரம் நடக்கும் அந்த போட்டியில் 240 கிமீ வேகத்தில் காரை ஓட்டி யார் அதிக நேரம் ஓட்டுகிறார்களோ அந்த அணியே வெற்றிபெற்ற அணியாக கருதப்பட்டும். இந்த 24 மணி நேரத்தில் ஒரு காருக்கு அந்தந்த டிரைவர்கள் மாறி மாறி காரை ஓட்டலாம். நேற்று பயிற்சியின் போது அஜித் 7வது இடத்தில் முன்னேறினார். இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் அஜித் கார் ஓட்டப் போவதில்லை என்ற ஒரு செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது எல்லா பத்திரிக்கைகளிலும் அஜித் ஒரேடியாக கார் ரேஸில் இருந்து விலகினார் என்று வெளியானது. இந்த நிலையில் இந்த முடிவிற்கான உண்மை பின்னணி என்ன என்பதை ரேஸ் எக்ஸ்பெர்ட்டான தருண் என்பவர் விளக்கமாக கூறியிருக்கிறார். இந்த மாதிரி முடிவு எடுத்ததற்கு அஜித்தின் ஒரு ஸ்ட்ரேட்டஜியும் ஒரு காரணம் என்று கூறியிருக்கிறார். அதாவது அவரது அணியில் அஜித்துடன் 4 டிரைவர்கள் இருக்கிறார்கள்.
இப்போது அஜித் வேறொரு அணிக்காக கார் ஓட்டப் போகிறார். அதே சமயம் தன்னுடைய அணியையும் வழி நடத்தப் போகிறார். இன்னொரு அணியில் இருந்து கொண்டு ஒரு சக போட்டியாளராகவும் மாறி தன்னுடைய அணிக்கும் ஒரு உறுதுணையாக இருக்கப் போகிறார் அஜித். ஏற்கனவே அவர் சொன்ன மாதிரி மல்டி டாஸ்கிங்கில் எனக்கு உடன்பாடு கிடையாது என்று அஜித் கூறியிருந்தார்.
அவர் சொன்னதை போல தன் அணியை வழி நடத்த மட்டும் செய்கிறார். உண்மையிலேயே அவருடைய முடிவு பாராட்டக்குரியது என தருண் கூறினார். மேலும் துபாய் நடக்கும் அந்த கார் பந்தயத்தில் ஒரு போட்டியில் இருந்து மட்டும்தான் அஜித் விலகியிருக்கிறாராம். porche 992 cup போட்டியில் உரிமையாளராக மட்டும் அஜித் பங்கேற்கிறாராம். porche cayman GT4 போட்டியில் டிரைவர்களில் ஒருவராக அஜித் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இது சமீபத்தில் நடந்த விபத்தால் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.