நண்பன் கோல்னா இதுதான்.. அன்று விஜய்.. இன்று அஜித்தா? சில் பண்ணும் தல
விஜய் அஜித்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இருவருமே ஒரே காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்தவர்கள். இருவரும் சேர்ந்து ராஜாவின் பார்வையிலே என்ற ஒரு படத்தில்தான் சேர்ந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இருவருமே யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விட்டனர். இன்று தமிழ் சினிமாவை சிவாஜி, எம்ஜிஆர் மற்றும் ரஜினி கமல் இவர்களுக்கு பிறகு ரூல் செய்பவர்கள் இவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு இருக்கும் மார்கெட் சினிமாவில் வேறு யாருக்குமே கிடையாது. இருவரின் படங்களுக்கும் இதுவரை நல்ல ஓப்பனிங் இருந்து வருகிறது. உயிரைக் கொடுக்கும் அளவுக்கு ரசிகர்களை வைத்திருக்கும் ஒரு மாஸ் ஹீரோக்களாக விஜயும் அஜித்தும் இருக்கிறார்கள். அதை போல் இருவரின் குடும்பங்களுமே நல்ல நண்பர்களாகத்தான் பழகி வருகிறார்கள்.
இருவருமே சினிமாவிற்கு கொடுக்கும் பிரேக்:
தொழில் முனையில் போட்டி இருந்தாலும் நிஜத்தில் விஜயும் அஜித்தும் நல்ல நண்பர்கள் என அனைவருக்கும் தெரிந்த விஷயம். சொல்லி வைத்தாற் போல் இருவருமே சினிமாவிற்கு பிரேக் எடுக்க இருக்கிறார்கள். விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதுதான் அவருடைய கடைசி படமாக இருக்க போகிறது. அதன் பிறகு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு முழு நேர அரசியல் வாதியாக மாற இருக்கிறார்.
இந்தப் பக்கம் அஜித் கார் ரேஸ் பைக் ரேஸ் என தனக்கு பிடித்தவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது கூட துபாயில் நடக்கப் போகும் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காகத்தான் சென்று இருக்கிறார். கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கிறார் அஜித். அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது.
அஜித்தின் வீடியோ:
இந்த நிலையில் துபாயில் தன்னுடைய ரேஸ் நண்பர்களுடன் சில் பண்ணும் அஜித்தின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதில் அஜித் சிங்கிள் ஸ்கேட்டிங்கில் ரைடு போகும் மாதிரியான வீடியோவும் வெளியாகி இருக்கின்றது. இதை பார்த்ததும் ரசிகர்கள் நண்பன் கோல்னா இதுதான் பா என இதே மாதிரி கோட் பட சூட்டிங்கில் விஜயும் சிங்கிள் ஸ்கேட்டிங் ரைட் சென்ற வீடியோவை பகிர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
அவர்கள் சொல்வதை போல சமீபகாலமாக விஜய் அஜித் ஸ்டில்கள் ஒரே மாதிரியாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. விடாமுயற்சி படத்திற்காக அஜித் ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் இருந்தார். அதை போல் கோட் படத்திலும் விஜய் கருப்பு நிற கோர்ட் சூட்டில் இருந்தார். உடனே ரசிகர்கள் இந்த இரு புகைப்படங்களை பகிர்ந்து நண்பர்கள்னா இப்படித்தான் இருக்கனும் என சொல்லி கமெண்ட்களை போட்டு வந்தனர்.