இது வேற கதை!.. அப்புறம் மியூசிக் டைரக்டர் அவர்தான்!.. தலைவர் 173 அப்டேட்!...
Thalaivar173: ரஜினியின் 173வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய விவகாரம் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிக அளவில் விவாதிக்கப்பட்டது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பு, ரஜினி ஹீரோ என்றால் எந்த இயக்குனரும் அந்த படத்தை இயக்க ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த வாய்ப்பை தவற விட்டு இருக்கிறார் சுந்தர் சி.
அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காமல் போனதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது. அதுபோக கதையை பலரிடமும் சொல்ல சொன்னதால் அவர் அதிருப்தியடைந்து இந்த முடிவு எடுத்தார் என்றும் சிலர் சொல்கிறார்கள். எதுவாக இருந்தாலும் ரஜினி 173 வது படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.
எனவே கடந்த பல நாட்களாகவே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தேடி வந்தது பல இயக்குனர்களிடம் கதை கேட்டார்கள். அதில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்து போனதால் அவரையே இயக்குனராக டிக் அடித்திருக்கிறார் என செய்திகள் வெளியானது. அனேகமாக ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி இதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்கிறார்கள்.
இந்த செய்தி வெளியான உடனேயே ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவுக்கு ஏற்கனவே சொன்ன அதே கதையைத்தான் தற்போது ரஜினியை வைத்து எடுக்கிறார் என செய்திகள் வெளியானது. ஆனால் ‘இது ஒரு புதிய கதை.. அந்த கதைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்கிறார்கள்.
இது நடந்தால் ரஜினி-அனிருத் கூட்டணியில் இது 6வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.