பாலா இப்படி சொன்னதும் ஷாக் ஆயிட்டேன்.. வணங்கான் படத்துக்காக அருண்விஜய் செய்த தியாகம்
மிகுந்த எதிர்பார்ப்புடன் வணங்கான்:
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் வணங்கான். இந்தப் படம் ஜனவரி 10 பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது. படத்தைப் பற்றிய தன்னுடைய அனுபவங்களையும் சினிமாவில் தான் சந்தித்த பிரச்சனைகள் தோல்விகள் ஆகியவைகளை பற்றியும் பாலா சமீப காலமாக பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
பாலாவின் படங்கள் இதற்கு முன்பு வெளியான போது இந்த அளவு சோசியல் மீடியா என்பது அதிகமாக இல்லை. ஆனால் இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால் இந்த படத்தை பெரிய அளவில் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதற்காக பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் பாலா. அதுமட்டுமல்ல இந்த படம் அருண் விஜய்க்கு நல்ல ஒரு வரவேற்பை கொடுக்கும் திரைப்படமாக இருக்கும் என்றும் இந்த படத்திற்கு பிறகு அருண் விஜய் திரும்பி கீழே போக மாட்டார்.
அருண்விஜய்க்கு இனிமே ஏறுமுகம்:
படிப்படியாக மேலேதான் போவார் என்றும் ஒரு பேட்டியில் பாலா கூறியிருந்தார். பாலாவின் திரைப்படங்களை பொருத்தவரைக்கும் அந்த படங்களில் நடித்த நடிகர்கள் அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். உதாரணமாக விக்ரம், சூர்யா இவர்களை சொல்லலாம். இப்போது அந்த வரிசையில் அருண் விஜய்யும் இணைந்திருக்கிறார் .ஏற்கனவே பல நல்ல நல்ல படங்களில் நடித்து வரும் அருண் விஜய் அவருடைய லட்சிய இடத்தை அடைவதற்காக இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.
அதற்கு ஒரு படிக்கலாக பாலாவின் இந்த வணங்கான் திரைப்படம் அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் அருண் விஜய் சமீபத்திய ஒரு பேட்டியில் வணங்கான் திரைப்படத்தை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கிறார். வணங்கான் திரைப்படத்தின் கதையை முதலில் பாலா சொன்னதும் ஜிம் போவதை நிறுத்திடுங்கள் அருண்.
ஒரு வருடத்திற்கு ஜிம் போக வேண்டாம் எனக் கூறினாராம். இது ஆரம்பத்தில் அருண் விஜய்க்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கிறது. ஏனெனில் அவருக்கு வொர்க் அவுட் செய்வதுதான் பேஷன் என்று சொல்லலாம். தன்னுடைய பாடியை கட்டுக்கோப்பாக வைப்பதில் அருண் விஜய் மிகவும் கவனம் செலுத்துபவர்.
பெரிய தியாகம்:
அவரை ஜிம் போக வேண்டாம் என்று சொன்னால் எப்படி இருந்திருக்கும். ஆனாலும் இந்தப் படத்தின் கதைக்கு அது தேவைப்பட்டதால் தான் ஒரு வருடம் நான் ஜிம் போகவே இல்லை .ஆனால் வாக்கிங் மட்டும் எடுத்துக் கொண்டேன் .படம் முடிந்த பிறகு வழக்கம் போல என்னுடைய வொர்க் அவுட்டை ஆரம்பித்து விட்டேன் என அருண் விஜய் கூறி இருக்கிறார்.