விஷாலுக்காக ஓடி வந்த ஆர்யா.. நண்பனுக்கு ஒன்னுனா சும்மா இருப்பாரா?
விஷாலின் உடல்நலம்:இப்போது சோஷியல் மீடியாக்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி விஷாலின் உடல்நலம் குறித்து தான். 12 வருடங்களுக்குப் பிறகு அவர் நடிப்பில் மத கஜ ராஜா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் அஞ்சலி வரலட்சுமி ஆகியோர் நடிக்கும் இந்த திரைப்படம் ஒரு ஃபுல் காமெடி என்டர்டெயிண்ட் திரைப்படமாக வெளிவர இருக்கின்றது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படி ஒரு நிலைமையா?: 12 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் இக்காலத்துக்கும் ஏற்ற திரைப்படமாகவே இந்த படம் இருக்கின்றது என கூறி இருக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விஷால் இந்த விழாவிற்கு வருகை தந்தார். அப்போது அவரைப் பார்த்த அனைவருமே அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
என்ன காரணம்?: கை நடுக்கத்துடன் சிறிது தள்ளாடியபடியே நடந்து வந்தார் விஷால். திடீரென என்ன ஆயிற்று விஷாலுக்கு என அனைவருமே கேள்வி எழுப்ப தொடங்கினர். அப்போது தொகுப்பாளினி டிடி அவருக்கு காய்ச்சல் இருப்பதால் அவரால் பேச முடியவில்லை என நிலைமையை சமாளித்தார். ஆனால் இதற்கு முழு காரணம் பாலா தான் என கூறப்பட்டது. அவன் இவன் படத்தில் வித்தியாசமான கேரக்டர் நடித்திருப்பார் விஷால். படம் முழுக்க தன்னுடைய கண்ணை கோணலாக வைத்துக் கொண்டு நடித்ததன் விளைவுதான் இந்த அளவு அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது.
நண்பர்கள் எடுத்த முடிவு: அந்த படத்தில் இருந்து தீராத தலைவலியாய் அவதியுற்று வந்தார் விஷால் என்றும் அது இன்று வரை அவருக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தி வருவதாகவும் அவருடைய நண்பர்கள் கூறினார்கள். இந்த நிலையில் கூடிய சீக்கிரமே விஷால் அவருடைய பழைய நிலைமைக்கு திரும்புவார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதற்கு காரணம் அவருடைய நெருங்கிய நண்பர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆர்யாவின் அக்கறை:அதிலும் குறிப்பாக இவருடைய நிலைமையை அறிந்து மும்பையில் இருந்த ஆர்யா சென்னைக்கு வந்து விட்டாராம். உடனே வீட்டிலிருந்த விஷாலையும் வெளியே அழைத்து ஆர்யாவின் ஹோட்டலில் தங்க வைத்து இனிமேல் விஷால் உடல் நலம் பூரண குணமடையும் வரை அவர் உடனையே ஆர்யா மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் இருக்கப் போவதாகவும் கூறி இருக்கிறார்கள்.
எப்படியாவது விஷாலை திரும்ப பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் ஆர்யா இப்போது இறங்கி இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லும் பட்சத்தில் விஷாலின் நிலைமை ஏன் முன்பு ஆரியாவுக்கு தெரியாதா? இப்போது திடீரென ஏன் இந்த அக்கறை என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகின்றனர்.