எனக்கும் அஜித்துக்கும் இருந்த ஆசை.. நிறைவேறல.. பாலா சொன்ன அந்த விஷயம்
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாலா. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் படம் இவர் எடுத்திருந்தாலும் அந்தப் படங்கள் அனைத்துமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவகையாக இருக்கின்றன. அவர் இயக்கிய ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உண்டான முக்கியத்துவத்தை எந்த அளவுக்கு கொடுத்திருப்பார் என்பதை நம்மால் உணர முடியும்.
பிதாமகன் படத்தில் சூர்யா விக்ரம் சங்கீதா லைலா என அனைவரின் கதாபாத்திரமுமே மக்கள் மனதில் நிலைத்து நின்றன. நந்தா படத்தில் கருணாஸ் உள்பட ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கி இருப்பார் பாலா. அதனால் தான் அவருடைய படங்கள் எக்காலத்தும் நின்னு பேசுபவையாக அமைகின்றன. அந்த வகையில் தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் பாலா.
அவர் இயக்கத்தில் நீண்ட வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படமாக வணங்கான் திரைப்படம் இருப்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்த்து இருந்து வருகிறது.படம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் எப்போதுமே பேட்டி கொடுக்காத பாலா வணங்கான் திரைப்படத்தை புரொமோட் செய்வதற்காக பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
அவரிடம் கேட்கக்கூடிய கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக அவர் நடிகர் நடிகைகளை அடிக்கிறார் என அவரைப் பற்றி கிசுகிசுக்கள் எழுந்தன. அதற்கும் பதில் அளித்திருக்கிறார். அதைப்போல அஜித்துக்கும் அவருக்கும் இடையே என்னதான் நடந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அது பற்றிய ஒரு கேள்விக்கு பாலா ஒரு பேட்டியில் பதில் அளித்து இருக்கிறார்.
அதாவது பாலாவிடம் ஒரு ரொமான்டிக் ஹீரோவாக ஆக்ஷன் ஹீரோவாகவே இருந்த அஜித்திடம் அப்படி என்ன நீங்கள் பார்த்தீர்கள்? எப்படி நான் கடவுள் படத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என எப்படி உங்களால் மட்டும் அவரிடம் பார்க்க முடிந்தது? ஏனெனில் மற்ற இயக்குனர்கள் எல்லாருமே இந்த மாதிரி அவரிடம் பார்த்ததில்லை. அதனால் உங்களுக்கு எப்படி இந்த ரோலுக்கு அவர் பொருந்துவார் என நினைக்க முடிந்தது என்ற ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பாலா பொருந்துவார் என்று நினைக்கல. ஆனால் பொருந்த வைத்துவிடலாம் என்று தான் நினைத்தேன். ரெண்டு பேருக்குமே பரஸ்பரமாக ஒரு படத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை என பாலா நான் கடவுள் பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.