வேள்பாரி தொடங்க டைம் வந்துடுச்சு.. சூப்பரான அப்டேட் கொடுத்த ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். ராம்சரண் நடிப்பில் படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. படத்தின் பாடலுக்கே பல கோடி ரூபாய் செலவழித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பெரிய அளவில் நடந்து வருகிறது.
தற்போது ஆந்திராவில் கேம் சேஞ்சர் படத்தின் மொத்த படக்குழுவும் புரோமோஷனுக்காக அங்கு கூடியிருக்கின்றனர். அங்கு நடந்த விழாவில் ஷங்கர் பல விஷயங்களை பகிர்ந்தார். கூடவே தில் ராஜு இருக்க வாரிசு படத்தில் தில்ராஜு எப்படி அந்த படத்தை புரோமோட் செய்து பல்பு வாங்கினாரோ அதேபோல கேம் சேஞ்சர் படத்தையும் ஷங்கர் ப்ரொமோட் செய்தார்.
அதாவது ஃபோக் டான்ஸ் இருக்கு, கிளாசிக்கல் இருக்கு என்று சொல்ல அவர் பின்னாடி இருந்த தமன் தில் ராஜூவை குறிப்பிட்டு இதேபோல்தான் ஒரு படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தில் ராஜுவும் பேசினார். அது மிகவும் வைரலானது என கூற மேடையில் இருந்த அத்தனை பேரும் சிரித்தனர். இந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கப் போகும் அடுத்த படம் வேள்பாரி.
பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆனபோதே இந்த படத்தை பற்றிய பேச்சு பரவலாக கோடம்பாக்கத்தில் அடிபட்டது. ஆரம்பத்தில் வேள்பாரி படத்தில் ரன்வீர் சிங் ,கே ஜி எஃப் புகழ் யஷ் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. அதன் பிறகு விக்ரம் சூர்யா நடிக்கப் போவதாகவும் ஒரு பேச்சு வந்தது. ஆனால் இன்னும் அதில் நடிக்கப் போகும் நடிகர்களை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரோமோஷனில் வேள்பாரி பற்றிய ஒரு சிறிய அப்டேட்டை ஷங்கர் கூறி இருக்கிறார். என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் வேள்பாரி. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டன. கொரோனா காலத்திலேயே இதனுடைய முழு ஸ்கிரிப்டையும் நான் எழுதிவிட்டேன். கூடிய சீக்கிரம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறியிருக்கிறார் ஷங்கர்.