என்னது உதயநிதியை சீண்டுனாங்களா? விடாமுயற்சி படத்துக்கு இதுதான் சிக்கலா?
விடாமுயற்சி ஏமாற்றம்:
அஜித் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த திரைப்படம் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் எந்தவொரு படங்களும் ரிலீஸாகாத நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருந்தது. பொங்கல் ரிலீஸாக இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் திடீரென படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா இந்தப் படம் சில பல காரணங்களால் பொங்கலுக்கு ரிலீஸாகாது என்று அறிவித்தனர்.
அதுவும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு இந்த அறிவிப்பு வெளியாகி ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. ஏற்கனவே குட் பேட் அக்லி படமும் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்காகத்தான் குட் பேட் அக்லி திரைப்படமும் தன்னுடைய தேதியை விட்டுக் கொடுத்தது. ஆக மொத்தம் அஜித்தின் இரண்டு படங்களும் முடிந்த நிலையில் இரண்டு படங்களுமே வெளியாகாத சூழ் நிலையில் இருக்கின்றன.
குட் பேட் அக்லியால் ரசிகர்கள் குஷி:
இந்த நிலையில் குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. விடாமுயற்சி படம் ரிலீஸாகாததற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் சில பேர் உதய நிதிதான் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணவிடாமல் தடுத்து நிறுத்துவதாகவும் உதய நிதிக்கு எதிராக சில கருத்துக்கள் விடாமுயற்சி படத்தில் இருப்பதாகவும் அதுதான் இந்தப் படத்திற்கு பிரச்சினை என்றும் கூறி வருகிறார்கள்.
இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் போது அப்படியெல்லாம் இல்லை. இந்தியன் 2 படமும் பெரும் சிக்கலில்தான் இருந்தது. ஷங்கருக்கும் லைக்காவுக்கும் பிரச்சினை, ஷங்கருக்கும் கமலுக்கும் பிரச்சினை என இத்தனை பிரச்சினைகளை தீர்த்து வைத்து இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்ய வைத்ததே உதய நிதிதான். அப்படி லைக்காவிற்கு ஆதரவாக இருக்கும் உதய நிதி எப்படி விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவார்?
மேலும் அஜித் அரசியல் ரீதியான கருத்துக்கள், வசனங்கள் என எதையும் தன் படத்தில் விரும்பமாட்டார். அரசியலுக்கும் அவருக்கும் ரொம்ப தூரம். அதனால் இந்தப் படத்தில் உதய நிதிக்கு எதிராக எந்த வசனமும் இருக்காது என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.