ஜனநாயகன் செகண்ட் சிங்கிள், டிரெய்லருக்கு தேதி குறிச்சாச்சி!.. இனிமே தளபதி திருவிழாதான்..
விஜய் தீவிர அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் 2026 ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகவுள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் அவரின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தெலுங்கில் பாலையா நடித்து வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக ஜனநாயகன் உருவாகி இருக்கிறது.
அதேநேரம் தமிழுக்கும், விஜய்க்கும் ஏற்றார் போல் சில மாற்றங்களையும் செய்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி யூடியூபில் இந்த வீடியோ சாதனை படைத்து வருகிறது. அதோடு இந்த படத்தின் ஆடியோ லான்ச் வருகிற டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.
அதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் டிசம்பர் 5 அல்லது 6ம் தேதி வெளியாகலாம் என செய்திகள் கசிந்துள்ளது. அதோடு ஜனநாயகன் படத்தின் டிரைலர் வீடியோ ஆங்கில புத்தாண்டன ஜனவரி 1ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனராம். டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு வெளியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இனிமேல் தளபதி திருவிழாதான் எனது விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.