Dhanush: இவரு வேணாம்.. தனுஷை பார்த்து பதறிய இயக்குனர்.. நம்பிக்கையுடன் படத்தை எடுத்த தயாரிப்பாளர்
இன்று தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட் வரைக்கும் மிகப்பெரிய புகழுடன் இருப்பவர் நடிகர் தனுஷ். ஆனால் ஆரம்பத்தில் தனுஷின் முகத்தை பார்த்து பல இயக்குனர்கள் அவரை ரிஜக்ட் செய்திருக்கின்றனர். இருந்தாலும் தனுஷின் தந்தை எப்படியாவது தனுஷை பெரிய ஆளாக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். துள்ளுவதோ இளமை படம்தான் தனுஷ் நடித்த முதல் படம்.
விடலைப் பருவ காதலை அந்தப் படத்தில் அழகாக காட்டியிருப்பார் கஸ்தூரி ராஜா. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் இன்னொரு பட வாய்ப்பு தனுஷுக்கு வந்திருக்கிறது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் காஜா மொய்தீன். தான் தயாரிக்கும் ஒரு படத்திற்கு புதுமுகங்களை தேடி கொண்டிருந்தார்களாம் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான காஜா மொய்தீனும் இயக்குனர் பூபதி பாண்டியனும்.
அதற்காக ஆடிசனும் நடந்திருக்கிறது. அதில் ஒருவர் செலக்ட் ஆகியிருக்கிறார். அவரிடம் காஜா மொய்தீன் 5000 ரூபாயை அட்வான்ஸாக கொடுத்து ஷேவ் செய்து நல்ல புது ஆடைகளை வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். போனவர் வரவே இல்லையாம். போன் செய்து கேட்டால் சம்பளம் எவ்வளவு தருவீர்கள் என கேட்டிருக்கிறார். உடனே ஆரம்பத்திலேயே இந்த பையன் பிரச்சினை செய்கிறார் என்று காஜாமொய்தீன் அந்த பையனை வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
அதன் பிறகுதான் பூபதி பாண்டியன் கஸ்தூரி ராஜாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரை வேண்டுமானால் டிரை பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் தனுஷை இதற்கு முன் பூபதி பாண்டியன் பார்த்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடனே பூபதி பாண்டியனும் காஜா மொய்தீனும் தனுஷை பார்க்க கஸ்தூரி ராஜா வீட்டிற்கு சென்று விவரத்தை கூறியிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில்தான் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போதுதான் தனுஷை பூபதி பாண்டியன் மற்றும் காஜா மொய்தீன் முதன் முதலில் பார்க்கிறார்கள். தனுஷை பார்த்ததும் பூபதி பாண்டியனுக்கு இஷ்டமே இல்லையாம். காஜா மொய்தீனை வெளியே தனியாக அழைத்து ‘சார் இந்த பையன் வேணாம் சார்’ என சொல்லியிருக்கிறார். உடனே காஜா மொய்தீன் கஸ்தூரி ராஜாவிடம் போய் தகவல் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். நல்ல முடிவா சொல்லுங்கள் என கஸ்தூரி ராஜாவும் சொல்லியிருக்கிறார்.
விடிந்தால் காஜா மொய்தீன் அலுவலகத்திற்கு கஸ்தூரி ராஜா அவருடைய மனைவி மற்றும் தனுஷ் ஆகியோர் சென்றிருக்கின்றனர். அப்பொழுதும் பூபதி பாண்டியன் சார் வேணாம் சார் என்று சொல்ல அதற்கு காஜா மொய்தீன் ‘ நானாய்யா தனுஷை நடிக்க வைப்போம்னு சொன்னேன். நீதானே சொன்ன. இப்போ அவங்க பெரிய நம்பிக்கையுடன் வந்திருக்காங்க’னு சொல்லி அந்தப் படத்தில் கமிட் செய்திருக்கின்றனர். அந்தப் படம்தான் தேவதையை கண்டேன். படம் சூப்பர் ஹிட். யார் வேண்டாம் வேண்டாம் என சொன்னாரோ அந்த பூபதி பாண்டியனே மீண்டும் தனுஷை வைத்து திருவிளையாடல் ஆரம்பம் என்ற படத்தை எடுத்து மறுபடியும் ஒரு ஹிட் கொடுத்தார்.
அப்படி இருந்த தனுஷ் இன்று நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார் என்றால் அது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அப்பவே தனுஷிடம் ‘ நீ ஒரு நாள் பெரிய ஆளாக வருவாய் என்று சொன்னேன்’ என காஜா மொய்தீன் கூறினார்.