நீ என் மகள்தான்.. திரிஷா சொன்னதுக்கு தக் லைஃப் பதில் கொடுத்த கமல்
கல்ட் கிளாசிக் திரைப்படம்: நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் தக் லைஃப். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மணிரத்தினமும் கமலும் இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் நாயகன் என்ற ஒரு கிளாசிக் கல்ட் படம் உருவாகி மக்கள் மத்தியில் இன்றளவும் அது பேசப்படும் திரைப்படமாக இருக்கிறது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி: அதனால் இந்த கூட்டணி மீது எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்புவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூடவே த்ரிஷா ,அபிராமி ,ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் ,நாசர் என பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சிம்புவுக்கு முன் படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது.
சிம்பு உள்ளே வர காரணம்: ஆனால் சில பல காரணங்களால் அவர்கள் இருவரும் படத்திலிருந்து விலகினார்கள். அதன் பிறகு தான் சிம்பு இந்த படத்திற்குள் வந்தார். படத்தை பொருத்தவரைக்கும் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் என அறிவித்திருந்தார்கள். ஆனால் ஜூன் மாதத்தில் இருந்து கேரளாவில் திரைத்துறை சார்பாக ஸ்ட்ரைக் அறிவித்துள்ளதால் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றும் முடிவில் படக்குழு இருந்து வருகிறது.
தக் லைஃப்: ஜூன் மாதத்திற்கு முன்பாக படம் ரிலீஸ் ஆகலாம் அல்லது தேதி தள்ளிப் போகலாம் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் ஒரு விழா நடக்க அந்த விழாவிற்கு கமல் மற்றும் திரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் தக் லைஃப் படத்தின் அனுபவத்தை பற்றி கேட்டபோது சில பல சுவாரசிய தகவல்களை இருவரும் பகிர்ந்தார்கள்.
நல்லவரா கெட்டவரா?: ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். அதனால் அந்த ரெங்கராஜ் சக்திவேல் நாயக்கர் என்பவர் நல்லவரா கெட்டவரா என்ற ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது அல்லது படத்தை பார்த்தால் தான் தெரியுமா என்றும் கேட்கப்பட்டது. அதற்கு கமல் ‘ஆமாம் ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகும் இதற்கான பதில் உங்களுக்கு கிடைக்காது. கணக்கிற்கு கூட்டல் முக்கியமா அல்லது கழித்தல் முக்கியமானு கேட்டால் பதில் வருமா? அப்படித்தான்’ என கூறினார். அவர் மட்டும் அல்ல த்ரிஷாவும் படம் ரிலீசானாலும் இதற்கான பதில் கண்டிப்பாக கிடைக்காது என கூறினார் .
அதன் பிறகு த்ரிஷா கமலை பற்றி கூறும் பொழுது எனக்கு ஒரு பள்ளிக்கூடம் சென்ற மாதிரி உணர்வு தான் இந்த படத்தில் ஏற்பட்டது. ஏனெனில் கமல் சாரிடம் இருந்து நிறைய அனுபவங்களை நாம் கற்றுக் கொள்கிறோம். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். அதனால் அவர் எனக்கு ஒரு பள்ளிக்கூடம் என்பதைப் போல த்ரிஷா பதிலளித்திருந்தார்.
அதற்கு கமல் அப்படி எல்லாம் கிடையாது. உங்களோடு சேர்ந்து நானும் அந்த பள்ளிக்கூடத்துக்குத்தான் வருகிறேன். என்னை ஒரு குரு ஸ்தானத்தில் வைத்து பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு குரு பாலச்சந்தர் மட்டும்தான். நான் இன்றளவும் என்னை ஒரு மாணவனாக தான் பார்க்கிறேன். அதனால் நீங்களும் நானும் சேர்ந்து அந்தப் பள்ளிக்கூடம் செல்கிறோம். ஒரு வேளை நீங்கள் எனக்கு மகளாக இருக்கலாம் அவ்வளவுதான் என கூறி அந்த பேட்டியை முடித்து விட்டார் கமல்.