{"vars":{"id": "76339:5011"}}

கடைசில அர்ஜூன் டைட்டிலயும் ஆட்டய போட்ட சிவகார்த்திகேயன்.. SK23 பட டைட்டில் டீசர் வெளியீடு

 

நடிகர் சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் இன்று அவருடைய பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். ஒரு நடிகரின் பிறந்த நாள் என்றாலே அந்த நடிகரின் புதுப்பட அறிவிப்பு அல்லது ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் ஏற்கனவே சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் பிறந்த நாள் என்பதால் சுதா கொங்கரா பராசக்தி படத்தின் பிடிஎஸ் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்,

எஸ்கே23: ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடிக்கிறார். கூடவே விக்ராந்த் , டான்ஸிங் ரோஸ் சபீர் என முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏஆர் முருகதாஸ் தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.


டைட்டில் காப்பி: சமீபகாலமாக சிவகார்த்திகேயனின் படங்களின் தலைப்பு ஏற்கனவே வெளியான படங்களின் தலைப்பாகவே வருகிறது. சிவாஜியிலிருந்து கார்த்திக் வரை நடித்த படங்களின் தலைப்பைத்தான் சிவகார்த்திகேயன் தன் படங்களுக்கு வைத்து வருகிறார். வேலைக்காரன், அமரன், பராசக்தி என ஏற்கனவே முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான படங்களின் தலைப்பு.

அர்ஜூன் பட தலைப்பு; அந்த வகையில் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் படத்தின் தலைப்பு மற்றும் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு மதராஸி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் , வேதிகா நடிப்பில் வெளியான மதராசி படமும் பிப்ரவரி 17 ஆம் தேதிதான் ரிலீஸானது. அதே பிப்ரவரி 17 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மதராஸி பட அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.


அர்ஜூன் எழுதி இயக்கிய மதராசி படத்தின் மூலம் தான் முதன் முதலில் வேதிகா அறிமுகமானார். இந்தப் படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. படம் ஆக்‌ஷன் கலந்த கமெர்சியல் படமாக மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படம்.இப்படி ஏற்கனவே வெளியான படங்களின் தலைப்பை வைத்து சிவகார்த்திகேயன் வெற்றி வாகை சூடி வருகிறார். அந்த வகையில் மதராஸி திரைப்படமும் வெற்றிபெறுமா என்பதையும் பார்க்க வேண்டும்.