{"vars":{"id": "76339:5011"}}

NBK111: சிம்புவுக்கே டஃப் கொடுக்கும் பாலையா!... தரமான போஸ்டருடன் வெளியான புதுப்பட அப்டேட்!..

 

தெலுங்கு சினிமா ரசிகர்களால் God Of Mass என கொண்டாடப்படுபவர் பாலையா. இவர் நடிக்கும் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் அனல் தெறிக்கும். பல கார்களும் மேலே பறக்கும்.. இவர் ஒரு அடி அடித்தால் 20 பேர் கீழே விழுவார்கள். அந்த ஆக்சன் காட்சிகளில் லாஜிக் இல்லை என்றாலும் ரசிக்கும்படி இருக்கும்.

பாலையாவின் படங்களுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்  நடித்த அகாண்டா திரைப்படம் அசத்தலான வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அகண்டா 2 படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வீடியோவும் ஏற்கனவே வெளியாகிய ரசிகர்களிடம் ஹைப் ஏற்றியிருக்கிறது.

இந்நிலையில்தான் பாலையாவின் புதிய பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் ரவி தேஜாவை வைத்து க்ராக் உள்ளிட்ட அசத்தலான ஆக்சன் படங்களை கொடுத்த கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பாலையா நடிக்கவுள்ளார். இது அவரின் 111வது திரைப்படமாகும். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இது ஒரு சரித்திர கதையாகும்.

இந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டரை பார்க்கும்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்ட சரித்திர கதை படத்தின் போஸ்டரை போலவே இருக்கிறது. ஏனெனில் அதில் இரண்டு சிம்புவை போல் இதில் இரண்டு பாலையாக்கள் இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பாலையா சிம்புவுக்கு டஃப் கொடுத்துள்ளார். சிம்பு படம் வருமோ இல்லையோ.. பாலையா படம் ஹிட் அடிக்கும்’ என பதிவிட்டு வருகிறார்கள்.