சூர்யாவே படம் கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேன்.. மிஷ்கினையும் பெருசா தாக்கியிருக்கு கங்குவா
கங்குவா:
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான கங்குவா படம் வெளியாகி பெரிய அளவில் விமர்சனத்திற்கு ஆளானது. படம் ரிலீஸான முதல் நாளிலேயே பலவித ட்ரோலுக்கும் ஆளானது. யாருமே இந்தப் படத்திற்கு இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வரும் என எதிர்பார்க்கவில்லை.
ஆனால் சூர்யா கொஞ்சம் யோசித்து இறங்கியிருக்கலாம் என்று கூறினார்கள். இதற்கிடையில் இந்தப் படத்தை பற்றி மறைமுகமாக ஒரு விழா மேடையில் மிஷ்கின் பேசியிருக்கிறார்.அதுதான் இப்போது வைரலாகி வருகின்றது. இதோ அவர் கூறியது:
கொஞ்ச நாள் முன்பு ஒரு பெரிய படம் வெளியாகி அதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து பெரிய அளவு ட்ரோல் செய்வதை பார்த்தேன். அது எல்லா ஊர்களிலும் இருக்கிறது. அந்தப் படம் நியாயமாக இருக்கும் பட்சத்தில் நன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த பத்திரிக்கைகாரர்களும் பார்வையாளர்களும் இத கொண்டு போய் சேர்ப்பார்கள். அந்தப் படத்தில் நியாயமும் தர்மமும் இருந்தால் நல்ல முறையில் கொண்டு போய் சேர்ப்பார்கள்.
விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது:
ஏனெனில் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த படத்தில் ஒரு உண்மை இருந்தால் போதும். தலையில் தூக்கி வைத்து கொண்டாடி விடுவார்கள். ஏதோ ஒரு வகையில் அசதி இருந்திருக்கிறது. ஏன் இந்த வாழ்க்கையில் கூட அசதி இருக்கத்தான் செய்யும். நாமும் படிச்சு வளர்கிறோம். அவர்கள் அதைப் பார்த்து பார்த்து வளர்கிறார்கள். அதனால் நடிகர்கள் கொஞ்சம் கருணையோடு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நான் சொல்வதற்கு அச்சப்படவில்லை. இன்னும் நான் கங்குவா படத்தை பார்க்கவில்லை. இருந்தாலும் அந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் வந்தது. இன்னும் நீங்கள் கொஞ்சம் கருணையோடு பார்க்கணும். ஏனெனில் சூர்யா போன்ற ஒரு நல்ல நடிகர் ஒரு அழகான நடிகர் நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிவகுமார் மாதிரியான ஆளுங்களை கலைத்துறை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாபெரும் நடிகர் சிவக்குமார்:
நம் கையில் சிவாஜி இல்லை. எம்.ஜி.ஆர் இல்லை. பெரிய பெரிய ஆளுங்க இல்லை. ஆனால் அவர்களுடன் பயணப்பட்டவர் சிவகுமார். எவ்வளவு முக்கியமான மனிதர். அவர் வீட்டில் வந்த இரண்டு குழந்தைகள் ரொம்ப நல்லவர்கள். இதை நான் சொல்லும் போதே அடுத்த ஒரு விமர்சனம் வரும் .சூர்யாவுக்கு நான் கதை சொல்லி இருக்கிறேன் என. ஆனால் நான் சூர்யாவிடம் கதை சொல்லப்போவதே இல்லை.
அவர் படம் கொடுத்தால் கூட நான் ஒத்துக்க மாட்டேன். ஆனால் நான் கருணையுடன் பார்க்க செல்கிறேன் என மிஷ்கின் கதையை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.