ரஜினியின் வாழ்த்து சேர வேண்டியவங்களுக்கு சேரும்.. யாருக்காக தெரியுமா?

by Murugan |
rajini
X

rajini

புத்தாண்டு தினத்தை ஒட்டி அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம். ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் பொங்கல் ரிலீசிலிருந்து விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப் போவதாக அந்த அறிவிப்பில் அறிவித்திருந்தார்கள். இது அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடத்தின் பெரிய ஏமாற்றமாக மாறி இருக்கிறது.

பொங்கல் ரிலீஸில்ல் குட்பேட் அக்லி திரைப்படம் தான் முதலில் வருவதாக இருந்தது. ஆனால் அஜித் சொன்னதின் பேரில் தான் விடாமுயற்சி திரைப்படத்தை முதலில் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில் பல போராட்டங்களை தாண்டி விடாமுயற்சி திரைப்படம் முதலில் வெளியாகட்டும் என அஜித் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் கடைசிவரை பல முயற்சிகள் எடுத்தும் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு கொண்டு வர முடியவில்லை. இது தொடர்பாக லண்டனில் தொடர்ந்து பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டே இருந்திருக்கின்றது.

சென்னையில் தமிழ் குமரன் மற்றும் லண்டனில் சுபாஸ்கரன் என இருவருமே இதைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஒரு பக்கம் படம் முடியவில்லை என்றாலும் எடுத்தவரை படத்துக்கு சென்சார் வாங்கிடுங்க என சுபாஸ்கரன் கூறியிருக்கிறார். அதற்காக சென்சாருக்கும் படத்தை அப்ளை செய்திருந்தார்கள். பத்து நாளில் முடிக்கப்பட வேண்டிய வேலையை மூன்று நாட்களில் முடிக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கும் விடாமுயற்சி படக்குழு கடுமையாக உழைத்தார்கள். இதற்கிடையில் ரஜினி நேற்று புத்தாண்டு வாழ்த்தாக பாட்ஷா பட வசனத்தை கூறி ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

அதில் நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான் .கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான். ஆனால் கை விட்டு விடுவான் என கூறி இருந்தார். இது கிட்டத்தட்ட அஜித் மற்றும் விடாமுயற்சி குழுவுக்கு அவர் சொன்ன ஆறுதலாக தான் இது அமைந்தது. ஏனெனில் இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தி ஒரு புத்தாண்டு நாளில் வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. கடைசி நேரத்தில் இந்த படத்திற்கான போராட்டம் இன்னொரு பக்கம் சுபாஷ்கரன் நிஜமாவே ஒரு நல்ல தயாரிப்பாளர்.

தமிழில் பல நூறு கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளாக மாற்றி எடுத்துட்டு போக வேண்டும் என நினைத்த ஒருவர். ஆயிரம் கோடியோடு வந்தால் கூட அதை 100 கோடியாக திருப்பி அனுப்பும் துறை தான் இந்த தமிழ் சினிமா துறை என இப்போது நினைத்து இருப்பார் சுபாஸ்கரன். ஒரு சிலர் செய்கிற தவறுகள் அல்லது அவரால் இதை சரியாக கட்டமைக்க முடியாத ஒரு இடைவெளி இதையெல்லாம் சேர்ந்துதான் படங்களுக்கும் ஒரு இடைவெளி வந்து கொண்டே இருக்கின்றது.

அதனால் சுபாஷ்கரன் ஒரு நல்ல தயாரிப்பாளர். இந்தப் படமே அவருக்கு கடைசி படமாக இருந்து விடுமோ என்ற ஒரு வருத்தத்தில் தான் ரஜினி இதை எல்லாம் குறிப்பிட்டிருக்கிறார் போல் என நான் நினைத்தேன் என இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

Next Story