Rajinikanth: மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து!.. கார்த்திகாவை கண்டுகொள்ளாத ரஜினி.. காரணம் இதுவா?..
நடிகர் ரஜினி சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் தொடர்ந்து கவனித்து வருபவர். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பதும் உண்டு. அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் சிலவற்றை பதிவிடுவதுண்டு. பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தி, சினிமா துறையில் சாதித்தவர்களுக்கு வாழ்த்து, இறந்தவர்களுக்கு இரங்கல் என இதில் ஏதோனும் ஒன்றிருக்கும்.
அதேநேரம் சில சமயம் சில முக்கியமான சம்பவங்களுக்கு ரஜினியிடமிருந்து எந்த ரியாக்சனும் இருக்காது. செய்தியாளர்களிடம் கூட அதுபற்றி பேச மாட்டார். அப்படி ஏதேனும் செய்தியாளர்கள் கேட்டால் ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு போய்விடுவார்.
நேற்று கூட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதற்காக தனது டிவிட்டர் பக்கத்தில் அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியிருந்தார். அதே நேரம் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் சென்னை கண்ணகி நகரில் வசிக்கும் கபடி வீராங்கனை கார்த்திகா தங்கப்பதக்கம் வென்றார். ஆனால், அவருக்கு ரஜினி எந்த வாழ்த்தும் சொல்லவில்லை.
கார்த்திகாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து சொன்னார்கள். தமிழக அரசு சில லட்சங்களை அவருக்கு பரிசாக கொடுத்தது. அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல் திரையுலகை சேர்ந்த பலரும் கார்த்திகாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். துருவ் விக்ரம், மன்சூர் அலிகான் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லி அன்பளிப்பு கொடுத்தனர். நடிகர் மன்சூர் அலிகான் ஒரு லட்ச ரூபாய் அவருக்கு பரிசாக கொடுத்தார். அதோடு ‘நீ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றால் உன் திருமணத்திற்கு நான் 100 பவுன் தங்கம் போடுவேன்’ என்றெல்லாம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
ஆனால் இதுபற்றி ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த டிவிட்டும் போடவில்லை. இதை சிலர் கையில் எடுத்து ரஜினியை விமர்சித்து வருகிறார்கள். ரஜினி எப்போதும் தேசிய அளவில் மட்டும்தான் கவனிப்பார். எளிய குடும்பத்தின் பின்னணியில் வந்த கார்த்திகாவை எல்லாம் அவர் கண்டு கொள்ள மாட்டார். இதுவே பிரபலத்தின் மகளாக இருந்திருந்தால் வாழ்த்து சொல்லியிருப்பார்.
ஜெயிலர் 2 படத்தின் வேலையில் பிஸியாக இருந்தார். அதனால் வாழ்த்து சொல்லவில்லை என்றால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து சொல்பவர் கார்த்திகாவை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அவரின் பின்னணிதான் காரணம்’ என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.