{"vars":{"id": "76339:5011"}}

Thalaivar173: ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு இவ்வளவு கோடி சம்பளமா?!.. ஆச்சர்யமா இருக்கே!..

 
thalaivar173

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்ட ரஜினி ராம்குமார் சொன்ன கதையை டிக் அடித்திருப்பதாக தெரிகிறது. அதோடு 2026 மார்ச் மாதம் ஷூட்டிங் துவங்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக றார். அதற்கு ஏற்றார் போல் ராம்குமாரிடம் முழுக்கதையும் தயாராக இருக்கிறது. எப்போது ஷூட்டின் என்றாலும் அவர் தயாராக இருக்கிறார்.

இது கல்லூரி பின்னணியில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் கதை என சொல்லப்படுகிறது. பேராசிரியாக உள்ளே போகும் ரஜினி என்ன செய்கிறார் என்பதுதான் திரைக்கதை. இந்த கதையை ஏற்கனவே ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவை வைத்து எடுக்கவிருந்தார். அதிகாரப்பூர்வ அறிவிப்பெல்லாம் வெளியானது. அதோடு இந்த படத்தில் சந்தானமும் நடிக்கவிருந்தார்.

பட அறிவிப்பு வெளியாகி விழாவெல்லாம் நடந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் இந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. இப்போது இந்த கதையைத்தான் தற்போது ரஜினிக்கு ஏற்றார் போல் ராம்குமார் கொஞ்சம் மாற்றியிருக்கிறார் என்கிறார்கள்..

இந்த படத்தின் அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கு ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு 10 கோடி சம்பளம் பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது. ராம்குமார் முதலில் இயக்கிய பார்க்கிங் படத்திற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 6 லட்சம்தானாம். சிம்புவின் 49வது படம் பேசப்பட்ட போது அவருக்கு இரண்டு கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது ரஜினி படம் என்பதால் அவருக்கு 10 கோடி சம்பளம் கொடுக்க ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் முன் வந்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.